AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் விவகாரம்: காங்கிரஸின் அரசியல் நாடகம் – மத்திய கல்வி அமைச்சர் கடும் விமர்சனம்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்முறையாக நீட் தேர்வு விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீட் விவகாரம்: காங்கிரஸின் அரசியல் நாடகம் – மத்திய கல்வி அமைச்சர் கடும் விமர்சனம்!
ராகுல் காந்தி - தர்மேந்திர பிரதான்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jul 2026 08:32 AM IST

நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக மாணவ அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினரின் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதன்முறையாக இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த ஒரு மாதமாக நீட் தேர்வு தொடர்பாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினரும் கையிலெடுத்து போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் டெல்லியில் மாணவ அமைப்பினருக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய கல்வி அமைச்சர் கடும் விமர்சனம்!

 

இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் மாணவர்களின் போராட்டத்தை அரசியல் கருவியாக பயன்படுத்துகிறது என்றார. மேலும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சீர்குலைப்பதே அவர்களது நோக்கம் என்ற அவர் பிரதமரின் இல்லம் முன்பு போராட்டம் நடத்தி பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பாதுகாப்பு நடைமுறைகளையும் அவர்கள் மீறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் நீட் உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்னைகளையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக இருந்தபோதும் காங்கிரஸ் அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றார்.

Follow Us