இன்று வெளியாகிறது பரிமளா & கோ படத்தின் ட்ரெய்லர்!
Parimala and Co movie trailer will be release today | தமிழ் சினிமாவில் மிகவும் ரசிக்கக்கூடிய காம்போவாக உள்ள நடிகர்கள் ஜெயராம் - ஊர்வசி இருவரும் இணைந்து நடித்த பரிமளா அண்ட் கோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவில் அதிக அளவில் மக்களால் ரசிக்கக் கூடிய ஜோடியாக வலம் வருகிறார்கள் நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி. இவர்கள் இருவரும் இணைந்து மலையாள சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து உள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் இணைந்து அதிக அளவில் படங்களில் நடித்து உள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள் என்றால் நிச்சயமாக அந்தப் படம் படு ஜாலியாக இருக்கும் என்பதில் ரசிகர்களுக்கு அதிக அளவில் நம்பிக்கை உள்ளது. இப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இணைந்து நடிப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி இவர்கள் இருவரும் இணைந்து தற்போது பரிமளா அண்ட் கோ படத்தில் நடித்து உள்ளனர்.
இயக்குநர் பாண்டிராஜ் எழுதி இயக்கிய இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின், சாண்டி மாஸ்டர், சந்தோஷ் சோபன், சஞ்சனா, அனந்திகா சனில்குமார் மற்றும் தமிழ்குமரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது.




இன்று வெளியாகிறது பரிமளா & கோ படத்தின் ட்ரெய்லர்:
இந்த நிலையில் இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடி மற்றும் ஃபேமிலி செண்டிமெண்டை மையாமாக வைத்து உருவாகி உள்ளது. படம் வருகின்ற ஜூன் மாதம் 05-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை இன்று 29-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… ஜெயிலர் 2 படத்தில் அந்த பாலிவுட் நடிகரின் கேமியோ இருக்கா? வைரலாகும் தகவல்
பரிமளா அண்ட் கோ வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Fun guaranteed! 🤩 #ParimalaAndCo Trailer drops tomorrow. 💥 Get ready for a wholesome entertainer. 🎬#ParimalaAndCoInCinemasJun5#Jayaram #Urvasi @iamSandy_Off @DirectorMysskin @isanjkayy @Ananthika108 @santoshsoban @iYogiBabu @LycaProductions @gkmtamilkumaran @pandiraaj_dir… pic.twitter.com/UJnIN0rgXu
— Lyca Productions (@LycaProductions) May 28, 2026
Also Read… நடிகர் அக்ஷய் குமாரின் பிறந்த நாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ராவடி படக்குழு