இனி முதல் 7 நாட்களுக்கு 5 காட்சிகள்… கோலிவுட் சினிமாவிற்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர் விஜய்
Across TN to screen 5 shows daily for the first 7 days in Theatres | முதலமைச்சர் தளபதி விஜய் பதவி ஏற்ற பிறகு தற்போது கோலிவுட் சினிமா கொண்டாடும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக முதல் காட்சி என்பது காலை 9 மணிக்கு தொடங்குவதுதான் வழக்கமாக உள்ளது. அந்த 9 மணி காட்சியும் அனைத்து நாட்களுக்கு செல்லுபடி ஆகாது. படம் திரையரங்குகளில் வெளியாகும் முதல் நாள் மட்டுமே இருக்கும். ஆனால் முந்தைய கோலிவுட் சினிமா என்பது காலை 5 மணிக்கே ஃபேன்ஸ் ஷோ என்று ஒன்று திரையிடப்படும். கோலிவுட் சினிமாவில் எந்த உச்ச நடிகரின் படமாக இருந்தாலும் அதிகாலையிலேயே அந்த நடிகர்கரின் ரசிகர்களுக்காக ஒரு காட்சி திரையிடப்பட்டது. அப்படி திரையிடப்படும் காட்சிகளில் ரசிகர்கள் தங்களது நடிகர்களுக்காக பானர் வைப்பது. அந்த கட்டவுட்டிற்கு பால் ஊற்றுவது என்று செய்யும் போது எதிர்பாராதவிதமாக கீழே விழுவதும் மற்றும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பது என பல அசம்பாவிதங்கள் நடைப்பெற்று வந்தது.
இதன் காரணமாகவே தமிழ் சினிமாவில் அதிகாலை காட்சி என்பது ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணி காட்சி என்பதே எவ்வளவு பெரிய உட்ச நட்சத்திரமாக இருந்தாலும் ஒளிபரப்பப்பட்டு வந்தது. ஆனால் அந்த 9 மணி காட்சி என்பது படம் வெளியாகும் முதல் நாள் அல்லது முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருந்தது.




கோலிவுட் சினிமாவிற்கு குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர் விஜய்:
இந்த நிலையில் தமிழகத்தின் முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான திரு ஜோசப் விஜய் அவர்கள் தற்போது கோலிவுட் சினிமாவிற்கு குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதன்படி இனி கோலிவுட் சினிமாவில் காலை 9 மணிக்கு தொடங்கும் காட்சி படம் வெளியான முதல் நாளில் இருந்து தொடர்ந்து 7 நாட்கள் வரை ஒளிபரப்பலாம் என்று தெரிவித்துள்ளார். அதன்படி படம் ஒரு நாளுக்கு 5 காட்சிகள் ஒளிபரப்பப்படும். இதன் காரணமாக கோலிவுட் சினிமாவில் வர்த்தம் என்பது உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நடைமுறை என்பது அனைத்து படங்களுக்கும் பொருந்தும் என்றும் இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் படம் வெளியாகும் போது யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்க வேண்டும் இந்த நடைமுறையை பின்பற்றி படத்தை வெளியிடலாம் என்றும் தெரிவித்துள்ளது.
Also Read… ஹெல்லல்லல்லோ.. ராம் சரணுடன் ஸ்ருதிஹாசன் – ஜான்வி கபூர்.. வெளியானது ஹெல்லல்லல்லோ ஆடியோ பாடல்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளில், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஜந்து காட்சிகள் திரையிடஅனுமதியளித்து⁰மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு#CMJosephVijay pic.twitter.com/RpUK6AL8kC— CMOTamilNadu (@CMOTamilnadu) May 25, 2026
Also Read… இந்த போட்டோவில் உள்ள சிறுவன் யார் தெரியுமா? டோலிவுட்டின் உச்ச நாயகன் இவர்.. அட அவர்தான்!