AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

R Madhavan: எனது மகனுக்கு அந்த 2 வாழ்க்கை பாடத்தை கூறியிருக்கிறேன் – ஆர்.மாதவன் பேச்சு!

R. Madhavan Shares 2 Life Lessons: இந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்துவருபவர் ஆர்.மாதவன். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அவர், தனது மகன் வேதாந்திற்கு கற்றுக்கொடுத்த 2 வாழ்க்கை பாடங்கள் என்னென்ன என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

R Madhavan: எனது மகனுக்கு அந்த 2 வாழ்க்கை பாடத்தை கூறியிருக்கிறேன் – ஆர்.மாதவன் பேச்சு!
வேதாந்த் மாதவன் மற்றும் ஆர் மாதவன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 13 Jul 2026 14:40 PM IST

பான் இந்திய சினிமா வரையிலும் பேமஸான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஆர்.மாதவன் (R.Madhavan). இவர் இறுதியாக துரந்தர் 2 (Dhurandhar 2) படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் ரன்வீர் சிங் (Ranveer Singh) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், இரு பாகங்களாக வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் ஆர்.மாதவன் “அஜய் சன்யால்” என்ற வேடத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரம் மிகவும் பவர் ஃபுல்லாக இருந்தது என கூறலாம். இப்படத்திற்கு பிறகு மாதவனின் நடிப்பில் பான் இந்திய படமாக உருவாகியுள்ளதுதான் “கோபாலசுவாமி துரைசுவாமி நாயுடு” (Gopalaswamy Doraiswamy Naidu). இதை இயக்குநர் கிருஷ்ணகுமார் ரமாகுமார் (Krishnakumar Ramakumar) இயக்கியுள்ளார்.

இப்படமானது உண்மையான கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் வெளியாகிறது. இப்பட தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.மாதவன், அதில் தனது மகன் வேதாந்திற்கு கற்றுக்கொடுத்த 2 வாழ்க்கை பாடங்களை கூறியுள்ளார். அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: ட்ரெயின் படத்தை கமல் சார், அமீர் கான் சார் கூட பண்ண முடியாது – மிஷ்கின் பேச்சு!

தனது மகனுக்கு ஆர்.மாதவன் கற்றுக்கொடுத்த 2 வாழ்க்கை பாடங்கள்:

அந்த பேட்டியில் பேசியிருந்த நடிகர் ஆர்.மாதவன், “எனது மகன் வேதாந்திற்கு நான் இரண்டு விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஒன்று, நன்றியுணர்வு மனப்பான்மை. வேறொருவர் கடுமையாக உழைத்து இந்த வாழ்க்கை முறையை அவர்களுக்கு வழங்கியிருப்பதால், தாங்கள் பாக்கியசாலிகள் என்பதை குழந்தைகள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

இதையும் படிங்க: கத்தி படத்தில் அந்த பாடலை வைக்காததற்கு என்ன காரணம்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்

மேலும் இரண்டாவது அவரிடம், லிஃப்ட்மேன், காவலாளி, ஓட்டுநர்கள், ஆயாக்கள் என அனைவரையும் அவன் மதிக்க வேண்டும் என்பதுதான். அவர்களைச் சாதாரணமாக அழைக்காமல், அக்கா, அண்ணா என்று மரியாதையுடன் அழைக்குமாறு அவனிடம் கூறினேன் ” என அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்.மாதவனின் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by R. Madhavan (@actormaddy)

ஆர்.மாதவனின் நடிப்பில் GDN படமானது வெளியாக தயாராகியுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இதில் ஆர்.மாதவனுடன், பிரியாமணி,  நடிகை துஷாரா விஜயனும் இணைந்து நடித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதியில் வெளியாகும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு பின் தமிழிலும் புது படங்களில் முக்கியமான வேடங்களில் மாதவன் நடித்துவருகிறாராம்.

Follow Us