AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நகைச்சுவை, காதல், காவியம், அதிரடி நிறைந்த அன்பே டயானா… வெளியானது கலகல ட்ரெய்லர்!

Anbe Diana Movie Trailer Out Now | தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குநராகவும் நாயகனாகவும் வலம் வருகிறார் பாரி இளவழகன். இவர் தற்போது எழுதி இயக்கி உள்ள படம் அன்பே டயானா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாக உள்ளது.

நகைச்சுவை, காதல், காவியம், அதிரடி நிறைந்த அன்பே டயானா… வெளியானது கலகல ட்ரெய்லர்!
அன்பே டயானாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Jul 2026 18:12 PM IST

தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் இளம் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் வருகை என்பது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஜமா என்ற படத்தின் மூலமாக இயக்குநராகவும் நாயகனாகவும் அறிமுகம் ஆனவர் பாரி இளவழகன். இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அழிந்து வரும் கலைகளில் ஒன்றான தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் பெண் வேடமிடும் தெருக்கூத்து கலைஞராக நடிகர் பாரி இளவழகன் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் பாரி இளவழகன் நாயகனாக நடித்து இயக்கி உள்ள படம் அன்பே டயானா.

இயக்குநர் பாரி இளவழகன் இரண்டாவதாக இயக்கி நாயகனாக நடித்து உள்ள இந்த அன்பே டயானா என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான போதே ரசிகர்களிடையே படத்தின் மீது கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

வெளியானது அன்பே டயானா படத்தின் ட்ரெய்லர்:

இந்த அன்பே டயானா படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் அன்பே டயானா படம் வருகின்ற 17-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தில் பாரி இளவழகன் உடன் இணைந்து நடிகர்கள் ரம்யா ரங்கநாதன், ரோஜா செல்வமணி, சேத்தன் கே.ஏ, பரிதபங்கள் கோபி என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த ட்ரெய்லர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… நூறு சாமி படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

அன்பே டயானா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kishen Das: கிஷன்தாஸூக்கு ஜோடியாகும் சஞ்சனா.. புது பட டைட்டில் போஸ்டரை வெளியிட்ட ஆர்யா!

Follow Us