IPL 2026: சிஎஸ்கே அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? களத்தில் இந்த 4 பேருக்கு கடும் போட்டி!
CSK New Coach: ஃபிளெமிங் பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 2 முறை சாம்பியன் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும் எம்.எஸ். தோனிக்கும், சிஎஸ்கே-வின் வெற்றிக்கு ஸ்டீபன் ஃபிளெமிங் முதுகெலும்பாக இருந்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் (Chennai Super Kings) வரலாற்றில் ஒரு முக்கிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. மிகவும் கடினமான ஒரு முடிவாக, கடந்த 18 ஆண்டுகளாக அணியின் மிகவும் நம்பிக்கைக்குரிய தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஃபிளெமிங் (Stephen Fleming) பயிற்சியாளர் பதவியில் இருந்து சமரசமாக பிரிந்துள்ளார். ஃபிளெமிங் பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 2 முறை சாம்பியன் லீக் பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும் எம்.எஸ். தோனிக்கும், சிஎஸ்கே-வின் வெற்றிக்கு ஸ்டீபன் ஃபிளெமிங் முதுகெலும்பாக இருந்தது. இருப்பினும், கடந்த 3 தொடர்ச்சியான சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல தகுதி பெறாததால், ஃபிளெமிங்கிற்குப் பதிலாக ஒரு புதிய பயிற்சியாளரை அணி இப்போது தேடும். எதிர்காலத்தில் சிஎஸ்கே-வின் பயிற்சியாளராக வர வாய்ப்புள்ள 4 பேரை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: இனி ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகள்? வெளியான முக்கிய தகவல்
எம்.எஸ். தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, தோனியை விட பெரிய மற்றும் சிறந்த தேர்வு வேறு யார் இருக்க முடியும்? இந்தப் பெயருக்கு எந்த அறிமுகமோ விளக்கமோ தேவையில்லை. எம்.எஸ் தோனி பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் வீரராக மட்டும் இல்லாமல் ஆலோசகராகவும் இருண்ட்து வருகிறார். இப்போது, அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெறுவது மட்டுமே பாக்கியுள்ளது. கேப்டன் மற்றும் வீரர் பதவிகளிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தோனி நேரடியாகத் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை. கடந்த 2026ம் ஆண்டு சீசனிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில காரணங்களால் அது நடக்கவில்லை. அதன்படி, சிஎஸ்கே-வின் புதிய சகாப்தத்தின் தொடக்கத்திற்கான மிகவும் பொருத்தமான முடிவாகவும் இருக்கும்.




ஹேமங் பதானி
ஃபிளெமிங்கிற்குப் பதிலாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹேமங் பதானி முன்னணியில் உள்ளார். படானி கடந்த 2 ஆண்டுகளாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சி ஊழியர்களில் ஒருவராக இருந்தார். இருப்பினும், அவரது பயிற்சியின் கீழ் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல தவறியது. தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் நிர்வாக மாற்றங்கள் நடைபெற்று வருவதால், பதானிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணைவதற்கான வாய்ப்பு உருவாகலாம். ஹேமங் பதானிக்கு தமிழ்நாடுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கும். இதனுடன், உலகளாவிய லீக்குகளில் அவருக்கு விரிவான பயிற்சி அனுபவம் இருப்பதால், ஹேமங் பதானி சிஎஸ்கே அணிக்கும் பயனுள்ளதாக இருப்பார்.
ராகுல் டிராவிட்
கடந்த 2026 ஐபிஎல் சீசனிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ராகுல் டிராவிட் இணைவார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனாலும், அது நடக்கவில்லை. ஆனால் இப்போது அதற்கான நேரம் கச்சிதமாக இருப்பதாகத் தெரிகிறது. டிராவிட் இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கியப் பிரமுகர். இதுமட்டுமின்றி, ஐபிஎல்-இன் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். மேலும் இந்திய அணியை டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு வழிநடத்தியவர். சிஎஸ்கே அணியின் சூழல் பொதுவாக மிகவும் நிதானமாக இருக்கும், மேலும், டிராவிட்டின் ஒழுக்கமும் நடைமுறை அணுகுமுறையும் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டு வரக்கூடும்.
ALSO READ: 18 ஆண்டுகள் பயணம்! பிரிந்த சிஎஸ்கேவும் ஃபிளெமிங்கும்.. கிடைத்த அதிகாரப்பூர்வ அப்டேட்!
பிரெண்டன் மெக்கல்லம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூழலையும் புரிந்துகொண்ட ஒரு வெளிநாட்டு வீரரைத் தேடிக்கொண்டிருந்தால், பிரண்டன் மெக்கல்லத்தை விடச் சிறந்த பெயர் வேறு இல்லை. மெக்கல்லம் சிஎஸ்கே அணிக்காக நீண்ட காலம் விளையாடியது மட்டுமல்லாமல், அவரது ஆக்ரோஷமான ஆட்டம் ரசிகர்களின் இதயங்களில் அவருக்கு ஒரு தனி இடத்தையும் பெற்றுத் தந்துள்ளது. ஒரு பயிற்சியாளராக, பேஸ்பால் பாணியிலான அணுகுமுறையுடன் இங்கிலாந்து டெஸ்ட் அணியைப் புனரமைப்பதில் அவருக்கு விரிவான அனுபவம் உண்டு. இருப்பினும், இங்கிலாந்து அணியுடனான அவரது காலம் முடிவுக்கு வருவதால், இந்தப் பொறுப்பிற்கு வரலாம். அதேநேரத்தில், மெக்கல்லம் தற்போது இங்கிலாந்து அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு பயிற்சி அளித்து வருவதால் சாத்தியம் இல்லை என்று தெரிகிறது.