AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகள்? வெளியான முக்கிய தகவல்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இனி வருங்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் இனி ஆஸ்திரேலியாவில் நடைபெற வாய்ப்புகள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசியை ஒப்புதல் அளித்தால் எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது

இனி ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகள்? வெளியான முக்கிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Jul 2026 18:01 PM IST

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இனி வருங்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் இனி ஆஸ்திரேலியாவில் நடைபெற வாய்ப்புகள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசியை ஒப்புதல் அளித்தால் எதிர்காலத்தில் ஐபிஎல் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இனி ஆஸ்திரேலியாவில் ஐபிஎல் போட்டிகள்?

இது தொடர்பாக 2 நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இணைந்து புதிய திட்டத்தை அறிவித்துள்ளன. அதில் விரைவில் நடைபெறவிருக்கும் பிக் பேஷ் லீக் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற டிசம்பர் 12, 2026 அன்று நடைபெறும் இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் நடப்பு சாமபியன் பெர்த் ஸ்காசர்ச்சர்ஸ் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : IND vs ENG: 3 போட்டிகளில் வாய்ப்பு.. 3லிலும் சொதப்பல்.. தடுமாறும் வைபவ் சூர்யவன்ஷி!

இந்தப் போட்டி இந்தியாவில் நடைபெறும் வெளிநாட்டு அணி பங்கேற்கும் முதல் டி20 லீக் போட்டி என்ற புதிய வரலாறு படைக்கவுள்ளது. இந்த போட்டியை ஆண்டுதோறும் சென்னையில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் கவுன்சில் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக ஒரு ஐபிஎல் போட்டியை ஆஸ்திரேலியாவில் நடத்த பிசிசிஐக்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி நடைபெற்றால் பிக் பேஷ் லீக் தொடர் இந்தியாவிலும், ஐபிஎல் தொடர் ஆஸ்திரேலியாவிலும் பிரபலமாகும் என்றும் இதனால் 2 தொடர்களுக்கும் பார்வையாளர்கள் அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது. இது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் இணைந்து இந்த திட்டத்தை அறிவிக்கவுள்ளகதாகவும் கூறப்படுகிறது

இதையும் படிக்க : IND vs ENG: கடந்த 14 ஆண்டுகளிலும் 6 தொடர் வெற்றி.. இதுவரை இல்லாத அச்சுறுத்தலில் இந்திய அணி!

மேலும், கிரிக்கெட்டை மேம்படுத்துவது, பயிற்சி, முதலீடு போன்றவற்றிலும் 2 நாடுகளும் இணைந்து செயல்படவுள்ளதாகவும் 2 நாட்டு வீரர்களும் அதிக அளவில் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உறவு மேலும் வலுப்பெறும் என்றும் வருங்காலத்தில் 2 நாடுகளும் இணைந்து ஐபிஎல் போன்ற தொடர்களை உருவாக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Follow Us