IND W vs ENG W: லார்ட்ஸ் ஸ்டேடியம்! டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இந்தியா மகளிர் – இங்கிலாந்து மகளிர்.. நேருக்கு நேர் சாதனை!
IND W vs ENG W Test: இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1986-ல் நடைபெற்றது. அது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, 1995-ல் இங்கிலாந்து அந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு (IND W vs ENG W) இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 2026 ஜூலை 10 ஆம் தேதியான நாளை முதல் தொடங்குகிறது. 1986 ஆம் ஆண்டு முதல் இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதேசமயம் இங்கிலாந்து ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 11 போட்டிகள் சமனில் முடிந்தன. இந்தநிலையில், வரலாற்று சிறப்புமிக்க லாட்ர்ஸ் ஸ்டேடியத்தில் முதல் முறை இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் மோதவுள்ளதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இரு அணிகளின் டெஸ்ட் வரலாறு:
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1986-ல் நடைபெற்றது. அது 0-0 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து, 1995-ல் இங்கிலாந்து அந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இதனை தொடர்ந்து, இரு அணிகளும் 1999 ஜூலை மற்றும் 2002 ஜனவரியில் தலா ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடின. அவை இரண்டுமே சமனில் முடிந்தன. 2002-ல் நடந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரும் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. 2005 நவம்பரில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியும் சமனில் முடிந்தது.




2006-ல் இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. அதனைத் தொடர்ந்து, 2014-ல் நடைபெற்ற ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி 2021-ல் சமநிலையில் முடிவடைந்த நிலையில், 2023 டிசம்பரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
அதிகபட்ச ஸ்கோர்:
இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி வரலாற்றில், முதல் 3 அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர்களை இந்திய அணி தன்வசம் வைத்துள்ளது. ஆகஸ்ட் 2002-ல், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் பிரம்மாண்டமான 467 ரன்களைக் குவித்தது. கடந்த 2023 டிசம்பர் மாதம் இந்தியா முதல் இன்னிங்ஸில் 428 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது. கடந்த 1986ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை 426/9 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
ALSO READ: இந்திய அணிக்கு மழை வில்லனா? இங்கிலாந்து அணிக்கு சாதகமா? வானிலை நிலவரம் இதோ!
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில், 7 போட்டிகளில் 12 இன்னிங்ஸ்களில் 51.10 சராசரியில் 511 ரன்கள் குவித்து மிதாலி ராஜ் அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகத் திகழ்கிறார். இந்தக் காலகட்டத்தில், மிதாலி ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்களை அடித்தார். இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் 500 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய ஒரே வீராங்கனை மிதாலி ஆவார்.