IPL 2027: ஐபிஎல் 2027ல் 2வது மிகப்பெரிய பரிமாற்றம் இதுதானா..? ஹர்திக் பாண்ட்யாவுக்கு அடிபோடும் ராஜஸ்தான் ராயல்ஸ்!
Hardik Pandya to Rajasthan Royals: ஹர்திக் பாண்டியா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் எவ்வளவு தொகைக்கு பரிமாற்றம் செய்யப்படுவார்கள் என்பது குறித்த தகவல் தற்போது இல்லை. இந்தத் தகவல், ஃபிரான்சைஸ்கள் அல்லது ஐபிஎல் நிர்வாகம் இந்த பரிமாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே தெரியவரும்.
ரிஷப் பண்ட் (Rishabh Pant) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து தனது முன்னாள் அணியான டெல்லி கேப்பிட்டல்ஸுக்குத் திரும்பியுள்ளார். பண்ட்டின் இடத்திற்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இணைந்துள்ளார் . இது ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது. தற்போது, ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குச் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாவது மிகப்பெரிய பரிமாற்றமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்று வீரராக வரலாம் என்றும் கூறப்படுகிறது.
ALSO READ: வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை!
ஹர்திக் பாண்ட்யாவுக்கு மாற்று வீரர் யார்..?
கடந்த 2024ம் ஆண்டு ஹர்திக் பாண்ட்யா ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார். அதனை தொடர்ந்து, ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவிற்கு கேப்டனாகப் பொறுப்பேற்றார். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 3 ஆண்டுகளாக மிக சிறப்பாக செயல்படவில்லை. கடந்த 2024 மற்றும் 2026ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்களுக்குத் தகுதி பெறத் தவறியது. 2025ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்களுக்குத் தகுதி பெற்றும் கோப்பையை வெல்லத் தவறியது. மேலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் ஹர்திக் பாண்ட்யா செயல்பாடு சராசரியாகவே இருந்தது.




இந்த நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் பரிமாற்றம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்திக்கிற்குப் பதிலாக மும்பை அணியில் இடம்பெறுவார் என்று கூறப்படுகிறது. 2026 ஐபிஎல் தொடருக்காக ராஜஸ்தான் அணியில் ஒரு பெரிய பரிமாற்றம் நடைபெற்றது. முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வழக்கமான கேப்டன் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சென்றார். அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜாவும் சாம் கரனும் அணியில் சேர்க்கப்பட்டனர்.
ஹர்திக் எவ்வளவு தொகைக்கு பரிமாற்றம் செய்யப்படுவார்?
ஹர்திக் பாண்டியா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் எவ்வளவு தொகைக்கு பரிமாற்றம் செய்யப்படுவார்கள் என்பது குறித்த தகவல் தற்போது இல்லை. இந்தத் தகவல், ஃபிரான்சைஸ்கள் அல்லது ஐபிஎல் நிர்வாகம் இந்த பரிமாற்றத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னரே தெரியவரும். ஹர்திக் பாண்ட்யா கடந்த ஐபிஎல் 2026 சீசனுக்காக மும்பை அணி ரூ. 16.35 கோடிக்கும், ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி ரூ. 18 கோடிக்கும் தக்கவைத்துக் கொண்டது.
ALSO READ: டெல்லி அணியில் ரிஷப் பண்ட்.. லக்னோ அணியில் குல்தீப்.. வெற்றிகரமாக நடந்து முடிந்த பரிமாற்றம்!
ஹர்திக் பாண்ட்யா ஐபிஎல் வாழ்க்கை
இந்திய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனது ஐபிஎல் வாழ்க்கையில் இதுவரை 162 போட்டிகளில் விளையாடியுள்ளார். 150 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, 10 அரைசதங்கள் உட்பட 2955 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில், ஹர்திக் பாண்ட்யா இதுவரை 82 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/36 ஆகும்.