AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை!

Sunil Gavaskar Advice: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் சதம் அடித்தனர். அதேநேரத்தில், மானவ் சுதார் தனது அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். இந்தியா விளையாடும்போதெல்லாம், நாட்டின் சிறந்த அணிதான் களமிறங்க வேண்டும் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.

Team India: வீரர்களுக்கு ஒரு மாதம் ஓய்வு கொடுங்க.. பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை!
பிசிசிஐ - சுனில் கவாஸ்கர்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 23 Jun 2026 15:43 PM IST

சமீபத்தில் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் (IND vs AFG) இடையே நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி (Indian Cricket Team) 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தத் தொடர் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கரை ஒரு பெரிய பிரச்சினை குறித்து சிந்திக்கத் தூண்டியுள்ளது. கிரிக்கெட் வீரர்களின் பணிச்சுமை அதிகரித்து வருவதையும், சர்வதேசப் போட்டிகள் மிகவும் பரபரப்பாகி வருவதையும் கருத்தில் கொண்டு, வீரர்களின் நலனுக்காக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு கவாஸ்கர் பிசிசிஐ வலியுறுத்தியுள்ளார். இந்திய வீரர்களின் உடற்தகுதியையும், அவர்களின் நீண்டகால விளையாட்டு வாழ்க்கையையும் உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மாதமாவது கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

ALSO READ: இந்திய டி20 அணிக்கு எதிரான வலுவான அணி.. களமிறக்கிய இங்கிலாந்து அணி!

சுனில் கவாஸ்கர் கூறியது என்ன..?

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்குப் பிறகு, ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பிசிசிஐ எப்போதும் ஆதரவளித்து வருகிறது, ஆனால் இப்போது இந்திய வீரர்களின் உடல்நலம் மற்றும் உடற்தகுதிக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று கவாஸ்கர் கூறினார். இதுகுறித்து பேசிய கவாஸ்கர், “ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு பிசிசிஐ ஒரு அண்ணனைப் போன்றது. கிரிக்கெட்டை மேம்படுத்துவதிலும் அவற்றின் நிதி நிலையை வலுப்படுத்துவதிலும் இந்த நாடுகளுக்கு எப்போதும் ஆதரவளித்து வருகிறது. இருப்பினும், நமது கிரிக்கெட் வீரர்களின் உடல்நலம் மற்றும் உடற்தகுதியும் மிகவும் முக்கியமானது. மேலும் வீரர்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் ஓய்வெடுக்க வேண்டும். இந்தியாவில் திறமையான வீரர்கள் ஏராளமாக உள்ளனர். எனவே, வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். ஆனால் இது இந்திய கேப்பின் முக்கியத்துவத்தைக் குறைக்கிறது. ஓய்வில் இருக்கும் ஒரு முக்கிய வீரருக்குப் பதிலாக விளையாடும் ஒரு வீரருக்கு கேப் வழங்கப்படக்கூடாது. அது சம்பாதிக்கப்பட வேண்டும்.

இந்தியா விளையாடும்போதெல்லாம், நாட்டின் சிறந்த அணிதான் களமிறங்க வேண்டும் என்று அவர் நம்புகிறார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் சதம் அடித்தனர். அதேநேரத்தில், மானவ் சுதார் தனது அறிமுகப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். அன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் இந்த அணிக்கு எதிராக தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 5 விக்கெட் அல்லது 10 விக்கெட் சாதனையைச் சேர்க்க அவர் விரும்ப மாட்டாரா? இந்தியா விளையாடும்போது, ​​சிறந்த அணிதான் விளையாட வேண்டும். நிச்சயமாக, காயம் குறித்த கவலைகள் எதுவும் இல்லாத பட்சத்தில் முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கபட வேண்டும். ஆனால், பணிச்சுமை என்ற பெயரில் வீரர்களுக்கு ஓய்வளிப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். நாட்காட்டியைப் பாருங்கள். ஒவ்வொரு மாதமும் எங்காவது இந்தியா கிரிக்கெட் விளையாடுகிறது.” என்றார்.

ALSO READ: அயர்லாந்து – இந்தியா டி20 தொடருக்கு புதிய கேப்டன் அறிவிப்பு.. ஜாம்பவான் வீரர் விலகல்!

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:

தொடர்ந்து பேசிய கவாஸ்கர், “ இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளும் அனுபவமும் கிடைப்பதற்காக ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகள் நிச்சயமாக நடத்தப்பட வேண்டும். ஆனால், தயவுசெய்து நமது முன்னணி வீரர்களைப் பாதுகாத்து, அவர்கள் தனித்தனியாக மட்டுமல்லாமல், ஒரு அணியாக, ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஓய்வு கொடுப்பதை உறுதி செய்யுங்கள். இந்த ஆண்டுக்கான அட்டவணை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது. அதில் மாற்றங்கள் செய்ய இயலாது. ஆனால், அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்கி முடிக்கத் திட்டங்கள் இருந்தால், தயவுசெய்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஒரு மாத ஓய்வு கொடுங்கள்” என்றும் கூறினார்.

Follow Us