AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs IRE: அயர்லாந்து – இந்தியா டி20 தொடருக்கு புதிய கேப்டன் அறிவிப்பு.. ஜாம்பவான் வீரர் விலகல்!

Ireland Squad For T20i Series Against India 2026: லோர்கன் டக்கர் அயர்லாந்து டி20ஐ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பால் ஸ்டர்லிங்கிற்குப் பதிலாக டக்கர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். காயம் காரணமாக பால் இந்தத் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. மேலும், பால் ஸ்டர்லிங் உட்பட மொத்தம் 6 வீரர்கள் காயம் காரணமாக இந்தத் தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

IND vs IRE: அயர்லாந்து – இந்தியா டி20 தொடருக்கு புதிய கேப்டன் அறிவிப்பு.. ஜாம்பவான் வீரர் விலகல்!
அயர்லாந்து அணி அறிவிப்பு
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Jun 2026 08:00 AM IST

ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ஒருநாள் தொடரிலும் இந்திய அணி (Indian Cricket Team) ஆப்கானிஸ்தானை முழுமையாக வீழ்த்தியது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தானை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து, இந்திய அணி இப்போது அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும். அயர்லாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி மொத்தம் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்தத் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) தலைமை ஏற்கிறார். இந்தத் தொடரானது வருகின்ற 2026 ஜூன் 26ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக, இந்தத் தொடருக்கான அணியை போட்டியை நடத்தும் அயர்லாந்து அறிவித்துள்ளது.

ALSO READ: இனி இந்திய அணி எப்போது, ​​யாரை எதிர்கொள்ளும்? ஜூன், ஜூலை மாதங்களுக்கான அட்டவணை!

அயர்லாந்து அணிக்கு ஒரு புதிய கேப்டன்:

லோர்கன் டக்கர் அயர்லாந்து டி20ஐ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பால் ஸ்டர்லிங்கிற்குப் பதிலாக டக்கர் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். காயம் காரணமாக பால் இந்தத் தொடரில் அணியில் இடம்பெறவில்லை. மேலும், பால் ஸ்டர்லிங் உட்பட மொத்தம் 6 வீரர்கள் காயம் காரணமாக இந்தத் தொடரில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

யார் இந்த லோர்கன்..?

டக்கர் லோர்கன் 10 ஆண்டு காலமாக சர்வதேச கிரிக்கெட் விளையாடி வருகிறார். லோர்கன் 2016ம் ஆண்டு அயர்லாந்து அணிக்காக  லோர்கன் இதுவரை 91 டி20 சர்வதேசப் போட்டிகளில் 1,730 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், லோர்கன் அயர்லாந்து அணிக்காக 25 ஒருநாள் போட்டிகளிலும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் முந்த்ரா அயர்லாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேத்யூ ஹோலார்டுக்குப் பதிலாக ஜெய் இடம்பெற்றுள்ளார். அதேநேரத்தில், ரூபன் வில்சன் முதல் முறையாக டி20ஐ கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார் .

அயர்லாந்து – இந்தியா டி20ஐ தொடர் அட்டவணை

  • முதல் போட்டி, 2026 ஜூன் 26, பெல்ஃபாஸ்ட், மாலை 6 மணி
  • இரண்டாவது போட்டி, 2026 ஜூன் 28, பெல்ஃபாஸ்ட், மாலை 6 மணி

ALSO READ: டி20 அணிக்குள் மீண்டும் கில்.. கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி வாய்ப்பு.. ஏன் தெரியுமா?

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

டி20 தொடருக்கான அயர்லாந்து அணி:

லோர்கன் டக்கர் (கேப்டன்), ராஸ் அடேர், பென் கால்ட்ரிட்ஜ், காரெத் டிலானி, ஜார்ஜ் டாக்ரெல், ஸ்டீபன் டோஹெனி, மேத்யூ ஹம்ப்ரீஸ், கேவின் ஹாய், மேத்யூ ஹாலார்ட், லியாம் மெக்கார்த்தி, ஜே மூந்திரா, ஹாரி டெக்டர், டிம் டெக்டர் மற்றும் ரூபன் வில்சன்.

Follow Us