Team India: டி20 அணிக்குள் மீண்டும் கில்.. கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி வாய்ப்பு.. ஏன் தெரியுமா?
Indian T20 Captain: கேப்டன் பதவிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரம் கூறியுள்ளது. அந்த அறிக்கையின்படி, வருகின்ற 2026 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரை ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாகத் தக்கவைக்க தேர்வாளர்கள் இறுதியாக முடிவு செய்துள்ளனர்.
2024 டி20 உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2026 சீசனுக்கு பிறகு, இந்திய அணியின் (Indian Cricket Team) புதிய டி20 சர்வதேசப் போட்டித் தொடரானது, அயர்லாந்து சுற்றுப்பயணத்துடன் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் விலக்கப்பட்டதை தொடர்ந்து, பிசிசிஐ (BCCI) ஷ்ரேயாஸ் ஐயரை புதிய கேப்டனாக நியமித்தது. அதே சமயம், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில், டி20 போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்படவில்லை. மேலும், கில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியிலும் இடம்பெறவில்லை. அப்படியென்றால், கில் டி20 திட்டங்களிலும் இல்லையா? ஆனால், அது உண்மையல்ல என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ: ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் – சுப்மன் கில் முன்னிலை
ரெவ் ஸ்போர்ட்ஸ், சில வட்டாரங்களை மேற்கோள் காட்டி, சுப்மன் கில்லை மீண்டும் டி20 அணிக்கு அழைத்து வந்து அவரிடம் கேப்டன் பதவியை ஒப்படைப்பது குறித்தும் தேர்வுக் குழு பரிசீலித்ததாகத் தெரிவித்துள்ளது. கேப்டன் பதவிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரின் பெயர்கள் விவாதிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரம் கூறியுள்ளது. அந்த அறிக்கையின்படி, வருகின்ற 2026 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரை ஷ்ரேயாஸ் ஐயரை கேப்டனாகத் தக்கவைக்க தேர்வாளர்கள் இறுதியாக முடிவு செய்துள்ளனர்.




இருப்பினும், 2028 ஒலிம்பிக் மற்றும் 2028 டி20 உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு, கேப்டன் பதவிக்கு ஷ்ரேயாஸ் ஐயரே சிறந்தவர் என்று தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அணி அறிவிப்பின்போது கூறியிருந்தார்.
வருகின்ற 2026 ஜூலை மாதம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு, வேறு கேப்டனுடன் கூடிய இரண்டாம் நிலை அணி அனுப்பப்பட வாய்ப்புள்ளது. ஐபிஎல் போட்டிகளில் அவரது செயல்பாட்டின் அடிப்படையில், ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு சிறந்த கேப்டன் என்று அகர்கரும் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இருப்பினும், கில் குறித்து தேர்வாளர்கள் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பை மற்றும் 2020 ஒலிம்பிக் போட்டிகளிலும் கில் சேர்க்கப்படலாம்.
ALSO READ: டெஸ்ட் கிரிக்கெட்டிற்குத் திரும்ப விருப்பமா..? கோலி கொடுத்த க்யூட் பதில்! எழுந்த சிரிப்பலை!
ஷ்ரேயாஸ் ஐயர் தனது கேப்டன்சியின் கீழ் இந்திய அணியை மேலும் முன்னேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யகுமார் யாதவின் கேப்டன்சியின் கீழ் இந்தியாவின் டி20 சாதனை மிகச் சிறப்பாக இருந்ததாலும், அணி தொடர்ச்சியாக 2 முறை டி20 உலகக் கோப்பையை வென்றதாலும், ஷ்ரேயாஸ் ஐயர் மீது கூடுதல் அழுத்தம் இருக்கும்.