AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. திரும்பிய கோலி.. இந்திய அணி அறிவிப்பு!

India Squad for England ODI Series: தொடை தசைநார் காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக விராட் கோலி அணியிலிருந்து விலக்கப்பட்டார். ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் அவருக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இருப்பினும், இங்கிலாந்தில் நடைபெறும் தொடரில் அவரது பங்கேற்பு, அவரது உடற்தகுதி சோதனையின் முடிவுகளைப் பொறுத்தே அமையும்.

IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்.. திரும்பிய கோலி.. இந்திய அணி அறிவிப்பு!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 21 Jun 2026 14:47 PM IST

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி (Indian Cricket Team) இன்று அதாவது 2026 ஜூன் 21ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி (Virat Kohli) மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்திருந்த போதிலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சுப்மன் கில் கேப்டனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ALSO READ: விராட் கோலி உடற்தகுதியுடன் உள்ளாரா? ஜூன் 22ம் தேதி பிட்னஸ் டெஸ்ட்.. உற்றுநோக்கும் பிசிசிஐ!

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இல்லாத இடம்:


ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் அணியுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து செல்லும் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சென்னையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் ஜெய்ஸ்வால் 110 ரன்கள் எடுத்து ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக விராட் கோலி மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தொடை தசைநார் காயம் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக விராட் கோலி அணியிலிருந்து விலக்கப்பட்டார். ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் அவருக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டது. இருப்பினும், இங்கிலாந்தில் நடைபெறும் தொடரில் அவரது பங்கேற்பு, அவரது உடற்தகுதி சோதனையின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். கோலியின் உடற்தகுதி சோதனையானது நாளை அதாவது 2026 ஜூன் 22ம் தேதி நடைபெறுகிறது.

டாடா ஐபிஎல் 2026 சீசனின் போது ஏற்பட்ட இடது கால் காயத்தைத் தொடர்ந்து, வருண் சக்ரவர்த்தி தற்போது பிசிசிஐயின் COE-வில் தனது மறுவாழ்வுப் பயிற்சியின் (rehab) இறுதிக்கட்டத்தில் உள்ளார். இதனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 (T20I) தொடரிலிருந்து வருண் சக்கரவர்த்தி விலகியுள்ளார்.

ALSO READ: மீண்டும் ஆப்கானிஸ்தானை வெற்றி கண்ட இந்தியா.. சாதித்த சுப்மன் படை..!

இந்தியாவின் ஒருநாள் (ODI) அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி (உடல் தகுதிச் சான்றிதழுக்கு உட்பட்டது), ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குர்னூர் பிரார்.

அயர்லாந்து டி20 போட்டிகளுக்கான அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி:

ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, திலக் வர்மா (துணை கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், சிங்டன் ரவீத் சுந்தர், சிங்தீப் ரவீத், அர்ஷித் பிஷ்னோயி. சூரியவன்ஷி, பிரசித் கிருஷ்ணா

 

Follow Us