AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AUS Test: இந்தியாவிற்கு வருகை தரும் ஆஸ்திரேலியா… வெளியான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அட்டவணை!

India vs Australia Test Series: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகின்ற 2027 ஜனவரி 29 முதல் 2027 பிப்ரவரி 2 வரை நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டேடியத்தில் இந்தியா 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில், இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்று, 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

IND vs AUS Test: இந்தியாவிற்கு வருகை தரும் ஆஸ்திரேலியா… வெளியான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அட்டவணை!
பார்டர் கவாஸ்கர் டிராபி 2027
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Aug 2026 19:41 PM IST

2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship 2027) தொடருக்கு மிக முக்கியமானதாக அமையவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. இந்திய அணி (Indian Cricket Team) தற்போது இலங்கையில் உள்ளது. இங்கு, இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி காலியில் நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 2026 ஆகஸ்ட் 23ம் தேதி சிங்கள விளையாட்டு மன்ற ஸ்டேடியத்தில் நடைபெறும். இதனை தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டான ஜனவரி 2027-ல் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முழு அட்டவணை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: பாடாய்ப்படுத்தும் காயம்.. விலகிய சாய் சுதர்சன்.. இலங்கை தொடரில் இடம்பெறும் பேட்ஸ்மேன் யார்?

நாக்பூரில் முதல் டெஸ்ட்:

ஆஸ்திரேலியாவின் இந்திய சுற்றுப்பயணம் 2027 ஜனவரியில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் வருகின்ற 2027 ஜனவரி 21 அன்று தொடங்குகிறது. இந்தியா இந்த ஸ்டேடியத்தில் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே தோல்வியுற்று, ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னையில் 2வது டெஸ்ட்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி, சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகின்ற 2027 ஜனவரி 29 முதல் 2027 பிப்ரவரி 2 வரை நடைபெற உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்டேடியத்தில் இந்தியா 35 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில், இந்தியா 16 போட்டிகளில் வெற்றி பெற்று, 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகள்:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி, குவஹாத்தியில் உள்ள டாக்டர் பூபன் ஹசாரிகா கிரிக்கெட் மைதானத்தில் வருகின்ற 207 பிப்ரவரி 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. இந்த மைதானத்தில் கடந்த 2025ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டியும் தோல்வியுற்றது.

நான்காவது டெஸ்ட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நடைபெறும். இந்தப் போட்டி, ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க சர்வதேச மைதானத்தில் 2026 பிப்ரவரி 19 முதல் 23 வரை நடைபெறும். இந்தியா இந்த ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றியும் ஒன்றில் சமனும் கண்டுள்ளது.

ALSO READ: இனி இதுதான் டைம்..! வீரர்களின் உடற்தகுதி சோதனையை கடுமையாக்கிய பிசிசிஐ!

தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2026 பிப்ரவரி 27 முதல் 2026 மார்ச் 3 வரை நடைபெறும் . இந்த மைதானத்தில் இந்தியா 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது, அவற்றில் 10 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இந்தியா நான்கில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியடைந்துள்ளது.

Follow Us