IND vs ENG: இந்திய டி20 அணிக்கு எதிரான வலுவான அணி.. களமிறக்கிய இங்கிலாந்து அணி!
England T20 Squad for India 2026: இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை இன்று அதாவது 2026 ஜூன் 22ம் தேதி அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சாகிப் மஹ்மூத் உட்பட பல வீரர்கள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்த அணியில் ஜோஸ் பட்லர் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் (IND vs ENG) ஆண்கள் அணியின் தேர்வுக் குழு, இந்தியாவுக்கு (Indian Cricket Team) எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 17 பேர் கொண்ட அணியை இன்று அதாவது 2026 ஜூன் 22ம் தேதி அறிவித்தது. இங்கிலாந்து அணிக்கு ஹாரி புரூக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் சாகிப் மஹ்மூத் உட்பட பல வீரர்கள் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்த அணியில் ஜோஸ் பட்லர் போன்ற அனுபவமிக்க வீரர்களும், ஜேம்ஸ் கோல்ஸ் என்ற புதுமுக வீரரும் இடம்பெற்றுள்ளனர்.
சோனி பேக்கர், ஜோர்டன் காக்ஸ் மற்றும் சாகிப் மஹ்மூத் ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர். இந்த 3 வீரர்களும் இந்த ஆண்டு நடைபெற்ற 2026 டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரைடன் கார்ஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரும் காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அதே நேரத்தில், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.




ALSO READ: டி20 அணிக்குள் மீண்டும் கில்.. கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு கடைசி வாய்ப்பு.. ஏன் தெரியுமா?
தேர்வுக்குழு கூறியது என்ன..?
அறிமுக வீரராக இல்லாத ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் கோல்ஸ் முதல் முறையாக இங்கிலாந்து தேசிய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்வாளர் மார்கஸ் நார்த் கூறுகையில், ”ஜேம்ஸ் கோல்ஸ் ஒரு அற்புதமான வீரர். கடந்த 12 மாதங்களாக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காகவும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடைபெற்ற டி20 போட்டிகளிலும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியில் தனது இடத்தைப் பெற்றுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே இந்தத் தொடர் தொடங்குவதால், அணியைத் தேர்ந்தெடுப்பதில் எங்களுக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கிறது. எனவே, நாங்கள் ஒரு பெரிய அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம்” என்றார்.
ALSO READ: இனி இந்திய அணி எப்போது, யாரை எதிர்கொள்ளும்? ஜூன், ஜூலை மாதங்களுக்கான அட்டவணை!
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி
Our 17-player squad is IN! 💪
Excitement building ahead of our five-match IT20 series with India!
Click below for the full story:
— England Cricket (@englandcricket) June 22, 2026
ஹாரி புரூக் (கேப்டன்), ரேஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், சோனி பேக்கர், டாம் பாண்டன், ஜேக்கப் பெத்தேல், ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், ஜோர்டான் காக்ஸ், சாம் கர்ரன், லியாம் டாசன், வில் ஜாக்ஸ், சாகிப் மஹ்மூத், ஆதில் ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டோங்கே, லூக் வுட்.
இங்கிலாந்து – இந்தியா டி20 போட்டி அட்டவணை
- 2026 ஜூலை 1, டர்ஹாம் (இரவு 10 மணி IST)
- 2026 ஜூலை 4, ஸ்ட்ராட்ஃபோர்ட் (மாலை 7 மணி IST)
- 2026 ஜூலை 7, மேற்கு பிரிட்ஃபோர்ட் (இரவு10 PM IST)
- 2026 ஜூலை 9, பிரிஸ்டல் (இரவு 10 மணி IST)
- 2026 ஜூலை 11, வெஸ்ட் எண்ட் (மாலை 7 மணி IST)