நடிகர் அக்ஷய் குமாரின் பிறந்த நாள் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ராவடி படக்குழு
Actor LK Akshay Kumar Birthday Special Poster | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமாரின் மகன் தான் நடிகர் எல்.கே.அக்ஷய் குமார். இவரது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராவடி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் எஸ்.எஸ்.லலித் குமார். இவரது மகனாக தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் எல்.கே. அக்ஷய் குமார். இவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான மாஸ்டர் என்ற படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். படத்தில் இவரது கதாப்பாத்திரம் சிறியது என்றாலும் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சிறை. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடித்து இருந்தாலும் எல்.கே. அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
மேலும் அந்த சிறை படமே எல்.கே. அக்ஷய் குமாரின் கதாப்பாத்திரத்தை சுற்றியே அமைக்கப்பட்டு இருந்தது. இந்தப் படத்தில் எல்.கே. அக்ஷய் குமாரின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் நாயகனாக தற்போது நடித்து வரும் படம் ராவடி. இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




புது போஸ்டரை வெளியிட்ட ராவடி படக்குழு:
இயக்குநர் விக்னேஷ் வடிவேலு எழுதி இயக்கி உள்ள படம் ராவடி. இந்தப் படத்தில் நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் பேசில் ஜோசஃப், ஜாஃபர் சாதிக், நோபல் கே ஜேம்ஸ், மற்றும் அருணாசலேஸ்வரன் பி.ஏ என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் 2026-ம் ஆண்டிற்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… அர்ஜுன் தாஸ் திருமணம் தொடர்பாக வைரலான தகவல் – விளக்கம் கொடுத்த அர்ஜுன் தாஸ் தரப்பு
ராவடி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Happy Birthday to our very own @lk_akshaykumar ♥️
Many more hits, many more memories, and many more moments to cherish 🌟
-Team #Raawadi 🎉Starring: @basiljoseph25 | @lk_akshaykumar | @JafferJiky | #NobleJames | @meshariqhassan7 @chaleswaran | #AishwaryaSharma@Vikjith… pic.twitter.com/K3O7VpfA95
— Seven Screen Studio (@7screenstudio) May 27, 2026
Also Read… இணையத்தில் வைரலாகும் அரசன் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ – சிம்பு கூட யார் இருக்காங்க தெரியுமா?