விஜய் பதவி ஏற்பு.. முதல் வரிசையில் மூன்று பேர் மிஸ்ஸிங்.. குடும்பம் குறித்து பேசிய சமுத்திரக்கனி!
Director Samuthirakani talks about CM Vijays family | தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் ரசிகர்களிடையே பிரபலமானவர் சமுத்திரகனி. இவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது தமிழக முதலமைச்சரின் குடும்பம் குறித்து பேசியது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் பல சூப்பர் ஹிட் சீரியல்களை இயக்கி மக்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் சமுத்திரக்கனி. வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகம் ஆவதற்கு முன்பே சின்னத்திரையில் பல மெகா ஹிட் சீரியல்களை இயக்கியதன் மூலம் பிரபலமான சமுத்திரகனி பிறகு வெள்ளித்திரையிலும் இயக்குநராக காலடி பதித்தார். தொடர்ந்து ரசிகர்களிடையே இயக்குநராக வரவேற்பைப் பெற்ற சமுத்திரகனி பிறகு படங்களில் நடிகராகவும் நடிக்கத் தொடங்கினார். சிலப் படங்களில் நாயகனாகவும், சிலப் படங்களில் வில்லனாகவும், சிலப்படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. தொடர்ந்து நடிகராக நடிக்கத் தொடங்கிய பிறகு படங்களை இயக்குவதில் பெரிய அளவில் கவனம் செலுத்தாத இவர் தொடர்ந்து நடிகராகவே நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் மட்டும் படங்களில் நடிக்காமல் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார். அதில் அதிக அளவில் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படங்களில் நடிப்பதன் மூலம் மட்டும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்காமல் அவ்வபோது தமிழக அரசியல் மற்றும் சினிமாவில் நடைபெறும் நிகழ்வுகளை பேசியும் செய்திகளில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறார் சமுத்திரகனி. அந்த வகையில் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்க முதலமைச்சர் ஜோசப் விஜயின் மனைவி மற்றும் குழந்தைகள் குறித்து சமுத்திரகனி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் பதவி ஏற்பு.. முதல் வரிசையில் மூன்று பேர் மிஸ்ஸிங்:
அதன்படி முன்னதாக விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சமுத்திரகனி பேசி வைரலான நிலையில் தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்ற போது நடந்த நிகழ்வு குறித்து பேசி வைரலாகி வருகிறார். அதன்படி தேர்தலில் வென்று விஜய் முதலமைச்சராக பதவியேற்று ஆட்சி செய்து வருவது மகிழ்ச்சி. ஆனால் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றும் போது முதல் வரிசையில் மூன்று பேர் இல்லாதது வருத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.




Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது கர படக்குழு… எங்கு எப்போது தெரியுமா?
அதன்படி அவர் விஜயின் மனைவி மற்றும் மகன், மகளை குறிப்பிட்டு அதனை கூறினார். மேலும் தேர்தலில் எதிரில் நின்று போட்டியிட்டவர்களையும் நேரில் சென்று அனைத்துக்கொண்ட விஜய் அவர்கள் அந்த மூன்று பேரையும் கைவிடக் கூடாது என்றும், பல இளைஞர்கள் உங்களை பின் தொடர்வதால் குடும்ப வாழ்க்கையை அவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று எடுத்துக்காட்டாக நீங்கல் இருக்க வேண்டும் என்று விஜய்க்கு சமுத்திரகனி கோரிக்கை வைத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.