பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தில் நாயகனாகும் இயக்குநர்? வைரலாகும் தகவல்
Pradeep Ranganathan Produce A Movie : தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக கலக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அதில் பிரபல இயக்குநர் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் காமெடி செண்டிமெண்ட் பாணியில் திரையரங்குகளில் வெளியான படம் கோமாளி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடித்து இருந்த நிலையில் நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தனது இரண்டாவது படமான லவ் டுடே படத்தை அவரே இயக்கி நாய்கனாகவும் அறிமுகம் ஆனார்.
இயக்குநராக பிரதீப் ரங்கனாதனை கொண்டாடிய மக்கள் நாயகனாகவும் கொண்டாத் தொடங்கினர். நடிகராக அறிமுகமான முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து மற்ற இயக்குநர்களின் இயக்கத்தில் நாயகனாக நடித்து வந்தார். அதன்படி இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் டியூட் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என தொடர்ந்து நாயகனாக நடித்த அனைத்துப் படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் தயாரிப்பாளராக களம் இறங்க உள்ள படம் குறித்த தகவல் ஒன்று சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தில் நாயகனாகும் இயக்குநர்?
பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த திரைப்படத்தைத் தயாரிக்க உள்ளார்; இத்திரைப்படத்தை அவரது உதவி இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இப்படத்தில் அஸ்வத் மாரிமுத்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்; இதில் அவர் ஒரு காவல்துறை அதிகாரியாகக் காட்சியளிக்கவுள்ளார் என்றும் சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இயக்குநராக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இதுவரை ஓ மை கடவுளே மற்றும் டிராகன் வெளியான நிலையில் அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து இயக்க உள்ள படத்தின் பணிகளில் அவர் பிசியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… கருப்பு படத்தில் சூர்யாவின் போலிஸ் லுக்… வைரலாகும் போட்டோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#MTexclusive — #PradeepRanganathan is set to produce his next film, which will be directed by his assistant directors. In this film, #AshwathMarimuthu will play the lead role, and he will be seen portraying a police officer. pic.twitter.com/sAUrFfJZGX
— Movie Tamil (@_MovieTamil) May 22, 2026
Also Read… பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஃபகத் பாசில் சம்பளம் இவ்வளவா? வைரலாகும் தகவல்