AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கருப்பு படத்தில் சூர்யாவின் போலிஸ் லுக்… வைரலாகும் போட்டோ

Suriya played a small role in the film Karuppu in a police look : நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் கருப்பு படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

கருப்பு படத்தில் சூர்யாவின் போலிஸ் லுக்… வைரலாகும் போட்டோ
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2026 19:05 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது திரையரங்குகளில் மாஸ் காட்டி வரும் படம் கருப்பு. இது சூர்யாவின் நடிப்பில் வெளியான 45-வது படம் ஆகும். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பின் போதே அடுத்தடுத்தப் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் சூர்யா. அதன்படி நடிகர் சூர்யா தனது 46-வது படத்திற்காக தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்தார். இவர் தமிழில் வாத்தி என்ற படத்தை நடிகர் தனுஷை வைத்து இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணியில் வெளியாக உள்ள படத்திற்கு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ஜித்து மாதவனுடன் தனது 47-வது படத்திற்காக நடிகர் சூர்யா கூட்டணி வைத்துள்ளார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவரை காவல்துறை அதிகாரியாக பார்க்க ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.

கருப்பு படத்தில் சூர்யாவின் போலிஸ் லுக்:

‘கருப்பு’ திரைப்படத்தில், காவலர் தோற்றத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சூர்யாவை நாம் பார்த்திருக்கிறோம். ‘சூர்யா 47’ திரைப்படத்தில், ஒரு முழுமையான காவல்துறை அதிகாரியாக நாம் அவரைப் பார்க்கவிருக்கிறோம் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

மேலும் இந்த கருப்பு படத்தில் நடிகர் சூர்யா தனது நடிப்பில் முன்னதாக வெளியாகி மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடித்து இருந்தார். ஒரு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே என்றாலும் அந்த காட்சிக்கு திரையரங்குகளில் ரசிகர்கள் ஆர்பரித்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… தமிழக அரசியலில் இது முதல்முறை – முதல்வர் விஜய்க்கு இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… டிஆர்பியில் போட்டிபோடும் விஜய் டிவி – சன் டிவி.. யார் ஃபர்ஸ்ட்-னு பாருங்க!

Follow Us