25 வருடங்களைக் கடந்த ஆனந்தம் படம்… தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி குறித்து பெருமையாக பேசிய இயக்குநர் லிங்குசாமி
25 Years Of Aanandham Movie | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ஆனந்தம் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி குறித்து பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஃபேமிலி செண்டிமெண்ட், லவ் மற்றும் ஆக்ஷன் பாணியில் தொடர்ந்து படங்களை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் இயக்குநர் லிங்குசாமி. இவரது இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்படி கடந்த 25-ம் தேதி மே மாதம் 2001-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான படம் ஆனந்தம். இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் முன்னணி நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.
அதன்படி நடிகர் மம்முட்டி நடித்து இருந்த நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை தேவையானி நடித்து இருந்தார், முரளி மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்பா, அப்பாஸ் மற்றும் அவருக்கு ஜோடியாக நடிகை சினேகா என பலரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி சூப்பர் குட் ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆனந்தம் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இயக்குநர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி குறித்து பெருமையாக பேசிய இயக்குநர் லிங்குசாமி:
ஆனந்தம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நீங்கள் தெரிவித்த அன்பான வாழ்த்துகளுக்கு அனைவருக்கும் நன்றி. தனது 43 அறிமுக இயக்குனர்களில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்த ஆர்.பி. சௌதரி சாருக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இன்று நான் பெற்றிருக்கும் ஒவ்வொரு அங்கீகாரமும், ஒவ்வொரு மைல்கல்லும், இந்த நீண்ட கால இருப்பும் உங்கள் நம்பிக்கையாலும் ஆதரவாலும்தான் சாத்தியமானது, சார். எப்போதும் போல உங்கள் ஆசீர்வாதங்கள் எனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன், சார்.
மேலும், இந்தப் பயணத்தில் உறுதுணையாக நின்ற மம்மூட்டி சார், முரளி சார், முழு நடிகர்கள், படக்குழுவினர் மற்றும் எனது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த காலத்தால் அழியாத நினைவின் ஒரு பகுதியாக இருந்த உங்கள் அனைவருக்கும் நன்றி என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தில் நாயகனாகும் இயக்குநர்? வைரலாகும் தகவல்
இயக்குநர் லிங்குசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Thanking everyone for your warm wishes on #25YearsOfAanandham.
Forever grateful to #RBChoudary @SuperGoodFilms_ sir for choosing me as one among his 43 debut directors. Every bit of recognition, every milestone, and the longevity I’ve been blessed with today is because of your…
— Lingusamy (@dirlingusamy) May 25, 2026