கே.எஸ்.ரவிக்குமாரின் அந்த படத்திற்கு இரண்டு க்ளைமேக்ஸ் – உங்களுக்கு தெரியுமா
Director KS Ravikumars film Samudhiram had two climaxes | இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற சமுத்திரம் படத்திற்கு இரண்டு க்ளைமேக்ஸ் காட்சிகள் உள்ளதாக ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது
தமிழ் சினிமாவில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் கே.எஸ்.ரவிக்குமார். நாயகன்களைப் பார்த்து படத்திற்கு செல்வது போல சில இயக்குநர்களின் படம் என்றால் அது நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும் என்று மக்கள் யோசிக்கும் இயக்குநர்களில் ஒருவர் தான் கே.எஸ்.ரவிக்குமார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படம் என்றால் அதனை கண்ணை மூடிக்கொண்டு திரையரங்குகளில் சென்று பார்க்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் சமுத்திரம். கடந்த 2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் உடன் பிறப்புகளின் பாசத்தை மையமாக வைத்து வெளியாகி இருந்தது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் நாயகனாக நடித்து இருந்த நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் முரளி, மனோஜ் பாரதிராஜா, காவேரி, அபிராமி, சிந்து மேனன், மோனல், கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில், ஆகாஷ், பிரமிட் நடராஜன், பிரியங்கா, மஞ்சுளா விஜயகுமார், தியாகு, ரியாஸ் கான், சந்தான பாரதி, பாண்டு, மனோபாலா, வாசு விக்ரம், லாவண்யா, கிரேன் ரவிக்குமார், கிரேன் ரவிக்குமார். ஸ்ரீதர் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




கே.எஸ்.ரவிக்குமாரின் சமுத்திரம் படத்திற்கு இரண்டு க்ளைமேக்ஸ்:
தங்கை மற்றும் மூன்று அண்ணன்களை சுற்றிய கதை தான் இந்தப் படம். இதில் பணம் ஆசை பிடித்த குடும்பத்தில் மருமகளாக செல்லும் தங்கைக்காக மொத்த சொத்தையும் விட்டுகொடுத்து வாழ்கின்றனர் மூன்று அண்ணன்கள். இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி தொலைக்காட்சியில் அந்த தங்கையின் கணவர் திருந்துவது போல காட்சி அமைக்கப்படும். ஆனால் யூடியூபில் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள படத்தில் கணவருடன் தங்கை சேரவில்லை என்றும் அந்த தங்கைக்காக அண்ணன்கள் எப்படி உருதுணையாக இருக்கிறார்கள் என்றும் காட்டப்பட்டுள்ளது. இது குறித்து பெண் ஒருவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கார்த்தியின் 30-வது படத்தை தயாரிக்கும் சூர்யா பட தயாரிப்பு நிறுவனம் – வைரலாகும் அப்டேட்
இணையத்தில் வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
Also Read… விறுவிறுப்பாக நடைப்பெறும் ஃபகத் பாசில் – பிரேம் குமார் பட ஷூட்டிங்