AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

DQ41 Movie: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் DQ41 பட முக்கிய காட்சி ஷூட்டிங் ஓவர் – படக்குழு வெளியிட்ட பதிவு இதோ!

DQ41 Movie Shooting: மலையாளம் சினிமாவின் மூலம் நாயகனாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய ரசிகர்களை ஈர்த்துவருபவர் துல்கர் சல்மான். தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில், இவர் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துவரும் படம்தான் DQ41. இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான ஷூட்டிங் முடிந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

DQ41 Movie: துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டேவின் DQ41 பட முக்கிய காட்சி ஷூட்டிங் ஓவர் – படக்குழு வெளியிட்ட பதிவு இதோ!
DQ41 திரைப்பட படப்பிடிப்புImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 24 May 2026 12:04 PM IST

நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) தமிழ் மற்றும் தெலுங்கு மொழி சினிமாவில் மிகவும் பிரபலமானவர். இவரின் நடிப்பில், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகைகயில் இறுதியாக வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றிருந்த திரைப்படம்தான் காந்தா (Kanthaa). இதை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் (Selvamani Selvaraj) இயக்கியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இயக்குநர் ரவி பாபு நெலகுடிட்டி (Ravi Babu Nelakuditi) இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் புதிய படம்தான் DQ41. இப்படத்தில் நடிகர் துல்கர் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துவருகிறார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு பூஜா ஹெக்டே நடித்துவரும் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலிருந்தே தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவந்தது. அந்த வகையில், இப்படத்தின் முக்கிய காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் முடிந்ததாகவும், அடுத்தகட்ட ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நீச்சலுடையில் தன்னை பற்றிய ஏ.ஐ புகைப்படங்கள்.. போலீசில் புகார் கொடுத்த ருக்மிணி வசந்த்!

DQ41 பட முக்கிய காட்சி ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

துல்கர் சல்மானின் DQ41 திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு எப்போது:

நடிகர் துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துவரும் இப்படத்தை இயக்குநர் ரவி பாபு இயக்கும் நிலையில், SLV சினிமாஸ் என்ற தயாரடிப்பு நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படமானது முற்றிலும் காதலை மையமாக கொண்ட ஒரு எமோஷனல் கதைக்களத்தில் தயாராகிவருகிறதாம். இதன் ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் பிராயம் வீடியோ பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவருகிறார். இவர் ஏற்கனவே துல்கர் சல்மானின், லக்கி பாஸ்கர் மற்றும் ஆகாசம்லோ ஓகா தாரா படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார்தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  விரைவில் DQ41 பட டைட்டிலை படக்குழு வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்கள் கொண்டாடும் கருப்பு பட கிளைமேக்ஸ்.. எனது உதவியாளர் சொன்ன ஐடியா! – சூர்யா பகிர்ந்த தகவல்!

துல்கர் சல்மான் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இவரின் நடிப்பில் மலையாளத்தில் ஐஅம் கேம் என்ற படமானது தயாராகியுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us