Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாள் – சிறப்பு போஸ்டரை வெளியிட்ட DQ41 படக்குழு

Pooja Hegde: தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் நடிகை பூஜா ஹெக்டே இன்று பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாள் – சிறப்பு போஸ்டரை வெளியிட்ட DQ41 படக்குழு
நடிகை பூஜா ஹெக்டே Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 13 Oct 2025 16:44 PM IST

தமிழ் சினிமாவில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற படத்தில் நாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தவர் நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde). இவர் இந்தப் படத்தில் நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் நடித்து இருந்தார். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றதைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காத நிலையில் தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பலப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்படி தெலுங்கு சினிமாவில் அதிகப் படங்களில் நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் நடித்து வந்த நடிகை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவர் இறுதியாக நடிகர் சூர்யா உடன் இணைந்து ரெட்ரோ படத்தில் நடித்து இருந்தார். இதில் ருக்மினி என்ற சாதுவான கதாப்பாத்திரமாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து இருந்தார். இவரது நடிப்பு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு மட்டும் நடிகை பூஜா ஹெக்டே நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பர்த்டே கேர்ள் பூஜா ஹெக்டேவிற்காக சிறப்பு போஸ்டரை வெளியிட்ட DQ41  படக்குழு:

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தற்போது நடிகர் துல்கர் சல்மான் உடன் இணைந்து நடித்து வருகிறார். துல்கர் சல்மானின் 41-வது படத்தில் அவருடன் நடிகை பூஜா ஹெக்டே இணைந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ரவி இயக்கி வருகிறார்.

மேலும் இந்தப் படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் இன்று நடிகை பூஜா ஹெக்டே பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சூர்யா 46 படம் எந்த மாதிரியான கதை? இணையத்தில் வைரலாகும் தகவல்

DQ41  படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Arasan: சிலம்பரசனின் ‘அரசன்’ பட ப்ரோமோ.. தியேட்டர் மற்றும் யூடியூப் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!