ரெட்ரோ படத்தில் ருக்மிணி கதாப்பாத்திரத்தை கொடுத்த கார்த்திக் சுப்பராஜிற்கு நன்றி – பூஜா ஹெக்டே!
Actress Pooja Hegde: நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது படங்கள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். மேலும் சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார்.

நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde) தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அவர் பாலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் தமிழில் முகமூடி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தார். நடிகர் ஜீவா நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்தார் நடிகை பூஜா ஹெக்டே. அதன்படி அவர் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்தார்.
இந்தப் படம் ரசிகர்களிடையே மபெரும் வரவேற்பைப் பெற்றது தொடர்ந்து தமிழில் பூஜா ஹெக்டேவிற்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. அதன்படி நடிகை பூகா ஹெக்டே தமிழ் சினிமா ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறத் தொடங்கினார்.




ரெட்ரோவில் ருக்மிணி கதாப்பாத்திரத்தை கொடுத்த இயக்குநருக்கு நன்றி:
இந்த நிலையில் சமீபத்தில் நடிகை பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்து இருந்தார். அதில் இந்தி சினிமாவில் எப்போதுமே தன்னை க்ளாமர் கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிக்க வைப்பதாகவும் மற்ற கதாப்பாத்திரங்கள் தனக்கு வருவதில்லை என்றும் தெரிவித்து இருந்தார். தொடர்ந்து பேசிய அவர் தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் நான் நடித்த ரெட்ரோ படத்தை பாலிவுட்டில் இருப்பவர்கள் பார்த்து இருந்தார் எனக்கு சிறந்த கதாப்பாத்திரங்களை கொடுக்க வாய்ப்பு உள்ளது.
அதன்படி ரெட்ரோ படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் ருக்மிணி மாதிரி ஒரு சிறந்த கதாப்பாத்திரத்தை கொடுத்ததற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்த கதாப்பாத்திரம் வெற்றியடைய முழு காரணமும் கார்த்திக் சுப்பராஜ் தான் என்றும் பூஜா ஹெக்டே அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
Also Read… பர்த்டே கேர்ள் சாயிஷாவின் இன்ஸ்டா ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம் தெரியுமா?
இணையத்தில் கவனம் பெறும் பூஜா ஹெக்டேவின் பேட்டி:
“More filmmakers in North India are typecasting me for just Glamour roles. I think they didn’t see films of me in South India. I will give full credits to Karthiksubbaraj sir to give me #Retro Rukmini character & showcase performance side”
– #PoojaHegde pic.twitter.com/L6k5vtdLBW— AmuthaBharathi (@CinemaWithAB) August 11, 2025
Also Read… பறந்து போ படத்திலிருந்து பிடிஎஸ் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்ட படக்குழு!