Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Coolie Movie : தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் கூலி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸை ஒட்டி, சட்டவிரோதமாக படத்தை இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த்தின் ‘கூலி’ திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை.. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
ரஜினிகாந்த்தின் கூலிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Aug 2025 16:18 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) 171வது படமாக உருவாகியிருப்பது கூலி (Coolie). இந்த படத்தை பிரபல தமிழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படமானது அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகி, வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. கூலி படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.  இந்த கூலி திரைப்படமானது சுமார் ரூ 355 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. பான் இந்திய நடிகர்கள் கலந்த கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் கூலி படமானது வெளியீட்டிற்கு தயாராகிவரும் நிலையில், படக்குழு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் (Chennai High Court) உத்தரவிட்டுள்ளது.

கூலி படத்தை எந்த  இணையதளங்களிலும் சட்ட விரோதமாக வெளியிடக்கூடாது என்றும், அதை தடுக்கவேண்டும் என்றும் கூலி படக்குழு வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூலி திரைப்படத்தை சட்டவிரோதமாக வெளியிடப்படுவதை தடுப்பதற்காக, சுமார் 36 சேவை இணையதள நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த தகவலானது தற்போது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – சிறப்பு அனிமேஷன் டைட்டில் கார்டை உருவாக்கியது கூலி படக்குழு

கூலி படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர் பதிவு :

இந்த கூலி திரைப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்த படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் இறுதியாக வெளியான லியோ படத்தை விடவும், இந்தப்  படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த்தின் சம்பளம் இத்தனை கோடியா?

தற்போது இப்படத்தின் ப்ரீ-புக்கிங்கில் மட்டுமே இதுவரை சுமார் ரூ 12 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. நிச்சயமாக இந்த படமானது வெளியாகி ரூ 700 முதல் 800 கோடிகள் வரை வசூல் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

கூலியில் பான் இந்திய நடிகர்கள் :

இந்த கூலி படத்தில்  நடிகர்கள் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் மற்றும் ஆமிர்கான் என பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டேவும் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியிருக்கிறார். இந்த படமானது தற்போது ப்ரீ புக்கிங்கில் வசூலை அள்ளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.