ஜன நாயகன் விஜயின் கடைசிப் படம் என்பது சோகத்தை ஏற்படுத்தியது – நடிகை பூஜா ஹெக்டே
Actress Pooja Hegde: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயாகன் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து உள்ளார். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் விஜயின் கடைசிப் படம் இது என்ற செய்தி தன்னை சோகத்தில் ஆழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde) தமிழ் சினிமாவில் தான் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால் இவர் அறிமுகம் ஆன முகமூடி படம் ரசிகர்களிடையே அந்த சமயத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் ஜீவா நாயகனாக நடித்த முகமூடி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து இருந்தார். சூப்பர் ஹீரோ கதையின் அடிப்படையில் உருவான இந்தப் படம் தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெளியான போது எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பூஜா ஹெக்டேவிற்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக இவர் தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டிப் பறக்க ஆரம்பித்தார். முக மூடி படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டே மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார்.
அதன்படி இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்த பீஸ்ட் படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் விஜய் – பூஜா ஹெக்டே காம்போவில் வெளியான பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை பூஜா ஹெக்டேவிற்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கியது என்றே கூறலாம்.
விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என்பது அவருக்கு தெரியும்:
இறுதியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் தமிழில் ரெட்ரோ படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இது இவர்கள் அமைக்கும் இரண்டாவது கூட்டணி ஆகும். மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் குறித்தும், ஜன நாயகன் படத்தில் அவருடன் இணைந்து பணிபுரிவது குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜன நாயகன் படத்தால் மிகவும் சந்தோஷமா இருக்கிறேன்.
ஆனால் விஜய் சாரின் கடைசி படம் அதுனால ரொம்ப வருத்தமா இருந்தது. அவரோட வேலை செய்றது ரொம்ப நிம்மதியான அனுபவம். அவர் ஒரு சூப்பர் ஸ்டார்ன்னு அவருக்குத் தெரியும், அதை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவருக்கு ஒரு பெரிய கனவு இருக்குன்னு எனக்குப் புரியுது என்றும் நடிகை பூஜா ஹெக்டே அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
Also Read… சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் – முதல் படம் என்னனு தெரியுமா?
இணையத்தில் வைரலாகும் நடிகை பூஜா ஹெக்டேவின் பேச்சு:
“Very excited about #JanaNayagan. I was sad as it’s @actorvijay sir’s last film🙁. Working with him is most relaxing experience. He knows in mind that he is a Superstar & doesn’t have need to prove that🌟♥️. I understand he has a big dream🤞”
– #PoojaHegde pic.twitter.com/VykGsUYQ8P— AmuthaBharathi (@CinemaWithAB) August 11, 2025