அந்த மாதிரி பாடலுக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும் – நடிகை பூஜா ஹெக்டே!
Actress Pooja Hegde: பான் இந்தியா அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை பூஜா ஹெக்டே (Actress Pooja Hegde). இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் அதிக அளவில் தெலுங்கு சினிமாவில் தான் நாயகியாக நடித்துள்ளார். சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மட்டும் இன்றி நடிகை பூஜா ஹெக்டே இந்தி மொழிகளிலும் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நாயகியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியுள்ளார்.
அதன்படி கூலி படத்தில் உள்ள மோனிகா பாடலுக்கு மட்டும் நடனமாட நடிகை பூஜா ஹெக்டே 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் பாடலும் யூடியூபில் ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




குத்து பாடலுக்கு டான்ஸ் ஆட பிடிக்கும்:
இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு குத்துப் பாடல்களில் நடனம் ஆடுவது மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் குத்துப் பாடல் என்றாலே அதில் ஒரு எனர்ஜி இருக்கிறது. அந்தப் பாடலுக்கு நடனம் ஆடவும் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருதாலும் அவர் தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜன நாயகன் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் மூலம் இவர்களின் ஜோடி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இவர்களின் ஜோடி பீஸ்ட் படத்தில் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read… அதிரடி காட்சிகளுடன் வெளியானது அனுஷ்கா ஷெட்டியின் காட்டி படத்தின் ட்ரெய்லர்
நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram