Pooja Hegde : மோனிகா பாடலுக்காக எனது பெஸ்டை கொடுத்தேன்.. பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி பதிவு!
Pooja Hegde Monica Song Viral Post : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவரின் நடனத்தில் கூலி படத்தின் இரண்டாம் பாடலான மோனிகா சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படலானது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், இப்பாடலில் நடனமாடியது குறித்து, நடிகை பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.

நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ரெட்ரோ (Retro). நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருந்தார். இதில் நடிகை பூஜா ஹெக்டே ருக்மிணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படத்தை அடுத்ததாக இவர், விஜய்யின் ஜன நாயகன் (Jana Nayagan)படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்ததாக நடிகை பூஜா ஹெக்டே ரஜினிகாந்த்தின் (Rajinikanth) கூலி (Coolie) படத்திலும் சிறப்புப் பாடல் ஒன்றில் நடனமாடியிருக்கிறார். கூலி படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா என்ற பாடலில் சிறப்பு நடனமாடியுள்ளார்.
அனிருத்தின் இசையமைப்பில் வெளியான இப்பாடலானது இணையத்தில் ட்ரென்டிங் லிஸ்டில் இருக்கிறது. இந்நிலையில், இப்பாடலின் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து, நடிகை பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இப்படத்தில் ஷூட்டிங் கிடைத்த அனுபவம் பற்றிப் பேசியுள்ளார். அது குறித்துப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : கூலி படத்தின் 3வது பாடல் எப்போது? படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட்!
நடிகை பூஜா ஹெக்டே பகிர்ந்த மோனிகா ஷூட்டிங் பதிவு :
View this post on Instagram
இந்த பதிவில் நடிகை பூஜா ஹெக்டே, ” மோனிகா பாடல் மீதான உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி, மோனிகா பாடல் எனது கேரியரில் ஒரு முக்கியமான பாடலில் ஒன்றாகும். இப்படத்தில் ஷூட்டிங்கில் வெயில், கடுமையான வெப்பம் மற்றும் இதனால் வரும் முக கருமை ஆகியவற்றை எதிர்கொண்டேன். அதனால் உடலில் கொப்பளங்கள் எனப் பல இருந்து, இதிலும் எனது அதிக ஆற்றல் தேவைப்படும் பாடலாக இது உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : சிவகார்த்திகேயனின் மதராஸி டைட்டிலில் மாற்றம்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
மேலும் இதை தொடர்ந்து, அதில் நடனமாடிய போது, அனைத்தையும் மோனிகா அப்பாடலுக்காக நான் கொடுத்தேன். தியேட்டரில் நிச்சயமாக அருமையாக இருக்கும் என உறுதியளிக்கிறேன். இந்த பாடலின் ஷூட்டிங்கின்போது மகாசிவராத்திரி விரதத்திலிருந்தேன், எனக்குச் சக்தி கொடுத்த நடன இயக்குநர்களுக்குச் சிறப்பான பாராட்டு” என நடிகை பூஜா ஹெக்டே அந்த பதிவு கூறியுள்ளார்.
பூஜா ஹெக்டேவின் புதிய படங்கள் :
நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படைத்ததை அடுத்ததாக இந்தியில் “ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹாய்” என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை அடுத்ததாக ராகவா லாரன்ஸின் காஞ்சனா 4 படத்திலும் கதாநாயகியாக நடித்துவருவதாகக் கூறப்படுகிறது.