ஜன நாயகன் படத்தில் விஜயுடன் நடித்த அனுபவம் – நடிகர் பாபி தியோல்
Actor Bobby Deol: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பாபி தியியோல். இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தில் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பாபி தியோல் பேட்டி ஒன்றில் ஜன நாயகன் படத்தில் நடித்தது குறித்து பேசியது வைரலாகி வருகின்றது.

நடிகர் பாபி தியியோல் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பாபி தியோல். நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்த அனிமல் படத்தில் வில்லனாக நடிகர் பாபி தியோல் (Actor Bobby Deol) மிரட்டி இருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு இந்தியில் மட்டும் இன்றி தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தில் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இதில் அவர் வில்லனாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக படத்தின் பூஜை நடைப்பெற்ற போது நடிகர் பாபி தியோல் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் நடிகர் பாபி தியோல் நடிகர் விஜய்க்கு வில்லனாக ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்தப் படம் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்பதால் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து காணப்படுகின்றது.




விஜயுடன் நடித்த அனுபவம் பற்றி பேசிய பாபி தியோல்:
இந்த நிலையில் நடிகர் பாபி தியோல் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் ஜன நாயகன் படம் குறித்தும் விஜய் குறித்தும் பேசியுள்ளார். அதில், நான் இப்போ ஜன நாயகன் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ளேன். இந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது.
இது ஒரு மிகப்பெரிய படம். விஜய் அரசியலில் ஈடுபட்ட உள்ளதால இதுதான் அவருடையை கடைசிப் படம்னு அவர் சொல்லி இருக்கார். விஜய் ஒரு மகந்தான நடிகர். அவருடன் நான் நடிக்கிறேன் என்று யாரிடமாவது சொன்னால் உடனே எங்க ஷூட்டிங் நடக்குதுனு கேப்பாங்க.
ஏன்னா விஜய்க்கு அவ்வள ரசிகர்கள் இருக்கிறார்கள். எங்கு விஜய் ஷூட்டிங் நடந்தாலும் அங்க கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் வந்துடும் என்றும் நடிகர் பாபி தியோல் அந்தப் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… அனிருத் சினிமாவிற்கு வர நான் காரணம் இல்லை – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விசயம்!
இணையத்தில் கவனம் பெறும் பாபி தியோல் பேட்டி:
“#JanaNayagan: I’m doing a film with #ThalapathyVijay, which is gearing up for Pongal release🤝. It’s his last film before joining politics, it’ll be a big film♥️. He is a massive star (Shares incident from shooting)🔥”
– #BobbyDeolpic.twitter.com/YW6HJIDpcS— AmuthaBharathi (@CinemaWithAB) August 9, 2025
Also Read… பவர் ஹவுஸ் பாடலுக்கு வைப் செய்யும் சிங்கப்பூர் காவல் துறை – வைரலாகும் இன்ஸ்டா பதிவு!