மலையாள சினிமாவின் ரங்கன் சேட்டன் ஃபகத் பாசிலுக்கு ஹேப்பி பர்த்டே!
HBD Actor Fahadh Faasil: மலையாள சினிமாவின் அடையாளமாக மற்ற மொழி ரசிகர்களிடையே இருப்பவர் நடிகர் ஃபகத் பாசில். இவர் இன்று தனது 43-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் ஃபீல் குட் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஃபாசில். இவரது மகன் தான் நடிகர் ஃபகத் பாசில் (Fahadh Faasil). இயக்குநரின் மகனாக மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆனார் ஃபகத் பாசில். ஆனால் இவர் நடித்த முதல் படமான கையேத்தும் தூரத் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. மேலும் நடிகர் ஃபகத் பாசிலையும் மலையாள சினிமா ரசிகர்கள் தொடர்ந்து ட்ரோல் செய்யத் தொடங்கினர். 2002-ம் ஆண்டு அறிமுகம் ஆன முதல் படமே படுதோல்வி அடைந்ததைத் அடுத்து சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி வெளிநாட்டிற்கு மேற்படிப்பிற்காக சென்றுவிட்டார் ஃபகத் பாசில். அதனைத் தொடர்ந்து 7 ஆண்டுகளாக நடிப்பதில் இருந்து விலகி இருந்த ஃபகத் பாசில் கடந்த 2009-ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
ஆனால் இந்தமுறை இவரது நடிப்பை பாராட்டாத ஆட்களே குறைவு என்று கூறும் அளவிற்கு 2009-ம் ஆண்டு வெளியான கேரளா கஃபே என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த மலையாள சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தார் நடிகர் ஃபகத் பாசில். கம்பேக் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கூறூம் அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியானப் படலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




தென்னிந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த ஃபகத் பாசில்:
மலையாள சினிமாவில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கும் போதே தமிழ் மட்டும் இன்றி மற்ற தென்னிந்திய மொழி ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார் நடிகர் ஃபகத் பாசில். இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான பலப் படங்களுக்கு தமிழில் ரசிகர்கள் ஏராளம் என்று சொல்லலாம். அதனைத் தொடர்ந்து நடிகர் ஃபகத் பாசில் மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்தப் படங்கள்:
2009-ம் ஆண்டு வெளியான கேரளா கஃபே படத்திற்கு பிறகு நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியான பலப் படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதில் சாப்பா குறிஷு, அன்னையும் ரசூலும், ஆர்டிஸ்ட், நார்த் 24 காதம், பெங்களூர் டேய்ஸ், மகேஷிண்ட பிரதிகாரம், தொண்டிமுதலும் ட்ரிக்சாக்ஷியும், நியான் பிரகாஷனும், கும்பளங்கி நைட்ஸ், பச்சவு அத்புத விளக்கும், ஆவேசம் என பலப் படங்களை மலையாளத்தில் வெளியானாலும் மற்ற மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ஃபகத் பாசில் அறிமுகம் ஆன படம்:
தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பே ஃபகத் பாசில் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நன்கு பரிச்சையமானவர் ஆவார். இந்த நிலையில் இவர் கடந்த 2017-ம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் நேரடி தமிழ் படத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் கார்பரேட் வில்லனாக நடிகர் ஃபகத் பாசில் அசத்தி இருப்பார். இதனைத் தொடர்ந்து ஃபகத் பாசில் தமிழில் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னம், வேட்டையன் மற்றும் மாரீசன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தப் படங்களில் நடிகர் ஃபகத் பாசிலின் நடிப்பு ரசிகரக்ளிடையே பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… மகன் சஞ்சய் குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?
ஃபகத் பாசில் மனைவி நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
Also Read… நடிகையாவதற்கு முன்பு அந்த நடிகரோட நடிக்க அவ்வளவு ஆசைப்பட்டேன் – ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்