Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் நடித்திருக்கும் ‘புல்லட்’ படத்தின் டீசர் இதோ!

Raghava Lawrence In Bullet Movie Teaser : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர், நடிகர் மற்றும் நடன இயக்குநர் என பன்முக திறன் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் மற்றும் இவரின் சகோதரன் எல்வின் நடித்திருக்கும் படம் புல்லட். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் நடித்திருக்கும் ‘புல்லட்’ படத்தின் டீசர் இதோ!
புல்லட் திரைப்படத்தின் அதிரடி டீசர்
Barath Murugan
Barath Murugan | Published: 08 Aug 2025 16:47 PM

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (jigarthanda double x). கடந்த 2023 ஆண்டு வெளியான இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்திற்கு பின்னர் இவர் நடித்து வரும் திரைப்படம்தான் புல்லட் (Bullet). இந்த படத்தை இயக்குநர் இன்னாசி பாண்டியன் (Innasi Pandiyan) இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய வேடத்தில் நடிக்க, அவரின் சகோதரர் எல்வின் (Elviin) முன்னணி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் முலமாகதான் இவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், இன்று 2025, ஆகஸ்ட் 8ம் தேதியில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர்கள் விஷால், பிருத்விராஜ் சுகுமாரன் , எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். தற்போது வெளியான இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற வருகிறது.

இதையும் படிங்க : அவன் பெரு ஜடல்.. நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

நடிகர் விஷால் வெளியிட்ட புல்லட் திரைப்படத்தின் டீசர் பதிவு ;

இந்த புல்லட் திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் எல்வின் முன்னணி வேடத்தில் நடிக்க, அவர்களுடன் நடிகர்கள் சுனில், சிங்கம் புலி, வைசாலி ராஜ் மற்றும் விஷ்வா ராஜ் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரம்மாண்டமாகத் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படமானது அதிரடி ஆக்ஷ்ன் மற்றும் காதல் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது. இந்த படத்தை பைவ் ஸ்டார் க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், விரைவில் திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ‘காந்தாரா 2’ படத்தில் ருக்மிணி வசந்த்.. படக்குழு வெளியிட்ட போஸ்டர்!

ராகவா லாரன்ஸின் புதிய படங்கள் :

நடிகர் ராகவா லாரன்ஸின் நடிப்பில் காஞ்சனா 4 மற்றும் பென்ஸ் என அடுத்தத படங்கள் உருவாகிவருகிறது. இதில் பென்ஸ் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்க, இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். மேலும் காஞ்சனா 4 படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி , அதில் நடித்தும் வருகிறார். இப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.