Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழ் நாட்டில் கூலி படத்தின் முன்பதிவு கலெக்‌ஷன் எவ்வளவு? வைரலாகும் தகவல்

Coolie Movie: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்து இருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் நாட்டில் கூலி படத்தின் முன்பதிவு கலெக்‌ஷன் எவ்வளவு? வைரலாகும் தகவல்
கூலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2025 10:54 AM

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் கூலி. இந்தப் படத்தின் இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 2-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டு பேசியது ரசிகர்களிடையே வைரலானது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் நாகர்ஜுனா பேசியது அனைத்தும் இணையத்தில் தொடர்ந்து வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் டிக்கெட் முன்பதிவு கடந்த வாரமே வெளி நாடுகளில் தொடங்கி படு ஜோராக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் நேற்று 08-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஒவ்வொரு  மாநிலத்திலும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகின்றது.

அதன்படி நேற்று காலை கேரள மாநிலத்தில் கூலி படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு ஒருபுறம் இருக்க திரையரங்குகளில் சென்று டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு செல்லும் வீடியோக்கள் நேற்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நாட்டில் கூலி படத்தின் ப்ரீ புக்கிங் விற்பனை எவ்வளவு?

இந்த நிலையில் தமிழ் நாட்டில் நேற்று ஆகஸ்ட் மாதம் 08-ம் தேதி 2025-ம் ஆண்டு இரவு 8 மணிக்கு கூலி படத்தின் ப்ரீ புக்கிங் ஓபனானது. அதன்படி சமூக வலைதளத்தில் வெளியான தகவலின் படி தமிழ்நாட்டில் மொத்தம் 798 காட்சிகள் முதல் நாள் ஒளிபரப்ப ஆக உள்ளதாகவும் அதில் தற்போதுவரை சுமார் ரூபாய் 2.67 கோடிகள் வசூலித்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து படக்குழு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் படத்தின் வெளியீட்டிற்கு 5 நாட்கள் உள்ள நிலையில் வசூல் நிலவரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… அந்த மாதிரி பாடலுக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும் – நடிகை பூஜா ஹெக்டே!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… விமானத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ!