Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

எனது சினிமா வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து தூண்களாக இருப்பவர்கள்… அன்பறிவு குறித்து லோகேஷ் நெகிழ்ச்சிப் பதிவு!

Director Lokesh Kanagaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது கூலி படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தூண்களாக இருப்பவர்கள் என்று சண்டைப் பயிற்சி மாஸ்டர்ஸ் அன்பறிவு இருவரையும் குறிப்பிட்டு பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

எனது சினிமா வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து தூண்களாக இருப்பவர்கள்… அன்பறிவு குறித்து லோகேஷ் நெகிழ்ச்சிப் பதிவு!
அன்பறிவு குறித்து லோகேஷ் நெகிழ்ச்சிப் பதிவுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2025 15:05 PM

தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj). இந்தப் படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர் தொடர்ந்து கைதி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். முழுக்க முழுக்க இரவு நேரத்தில் நடைபெறும் ஒரு குற்றச் சம்பவத்தை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து 3-வது படத்திலேயே உலக நாயகன் கமல் ஹாசனின் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ஆம் கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்தின் மீதனா ரசிகரக்ளின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

மேலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த விதத்திலும் ஏமாற்றம் அடையாத வகையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விஜயின் நடிப்பில் லியோ படத்தை இயக்கினார். இதுவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. அதன்படி லோகேஷ் இயக்கிய அனைத்தும் படங்களுமே ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படங்கள். இந்தப் படங்கள் அனைத்திற்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர்கள் அன்பறிவ். இவர்கள்தான் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்திற்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர்.

அன்பறிவு குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு:

இந்த நிலையில் அன்பறிவ் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், எனது சினிமா வாழ்க்கை தொடங்கியதில் இருந்து எனது இரண்டு தூண்களாக இருப்பவர்கள் அன்பறிவ். இவர்களைப் பற்றி பேச இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

நான் இப்போது இருக்கும் இடத்தில் என்னைப் பார்க்க அவர்கள் எப்போதும் ஆசைப்பட்டிருக்கிறார்கள், என் வாழ்க்கையில் நான் அடைந்த அனைத்து வெற்றிகளிலும் அவர்களால் எப்போதும் ஒரு பெரிய பங்கு வகிக்கப்பட்டிருக்கிறது அதற்காக உங்கள் இருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், மேலும் நீங்கள் இயக்குநர்களாக உயர்ந்து வருவதைக் காண நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் உங்களை என்றென்றும் நேசிக்கிறேன் மாஸ்டர்ஸ்/அண்ணாஸ் என்று அந்தப் பதிவில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்து இருந்தார்.

Also Read… அந்த மாதிரி பாடலுக்கு டான்ஸ் ஆட ரொம்ப பிடிக்கும் – நடிகை பூஜா ஹெக்டே!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… விமானத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினிகாந்த் – வைரலாகும் வீடியோ!