Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பறந்து போ படத்திலிருந்து பிடிஎஸ் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்ட படக்குழு!

BTS Lyric Video: நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாகவும் நடிகை கிரேஸ் ஆண்டனி நடிப்பில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான படம் பறந்து போ. இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தில் இருந்து பாடல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

பறந்து போ படத்திலிருந்து பிடிஎஸ் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
பறந்து போImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 12 Aug 2025 19:57 PM

இயக்குநர் ராம் (Director Ram) எழுதி இயக்கிய படம் பறந்து போ. மனித உறவுகள் குறித்து இவர் எடுக்கும் படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் பெரிது. அந்த வகையில் முன்னதாக அப்பா மகள் பாசத்தை வைத்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்கள் இடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது அப்பா மகன் உறவை மையமாக வைத்து இயக்குநர் ராம் இயக்கிய படம் தான் பறந்து போ. இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்து இருந்த நிலையில் பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நாயகியாக நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிதுல் ரியான், அஞ்சலி, விஜய் ஏசுதாஸ், அஜூ வர்கீஸ், ஜெஸ் குக்கூ, தியா, பாலாஜி சக்திவேல், ஸ்ரீஜா ரவி, தேஜஸ்வினி என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

பிடிஎஸ் பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட்ட பறந்து போ படக்குழு:

பறந்து போ படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்து உள்ளார். படம் முழுவதும் சின்ன சின்னதாக பாடல்கள் நிறைய இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் படத்தில் இருந்து பிடிஎஸ் பாடலின் லிரிக்கள் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதி இருந்த நிலையில் இசையமைப்பாளரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் குமார் பாடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜன நாயகன் விஜயின் கடைசிப் படம் என்பது சோகத்தை ஏற்படுத்தியது – நடிகை பூஜா ஹெக்டே

பறந்து போ படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கங்குவா படத்தில் நடிக்க இதுதான் காரணம் – பாபி தியோல் சொன்ன விசயம்