9 ஆண்டுகளை நிறைவு செய்த குரு சோமசுந்தரத்தின் ஜோக்கர் படத்தை எந்த ஓடிடியில் பர்க்கலாம்?
9 Years Of Joker: நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் ஜோக்கர். இந்த நிலையில் இந்தப் படத்தை தற்போது எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த செய்தியில் பார்ப்போம்.

இயக்குநர் ராஜு முருகன் (Director Raju Murugan) எழுதி இயக்கி தமிழ் சினிமாவில் வெளியான படம் ஜோக்கர். கடந்த 12-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2016-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நாயகனாக நடிக்க நடிகை ரம்யா பாண்டியன் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் காயத்ரி கிருஷ்ணா, மு.ராமசுவாமி, பாவா செல்லதுரை பி.வி.ஆனந்தகிருஷ்ணன், கனியப்பன், வி.தாமரைசெல்வன், எஸ்.ஏ.லெட்சுமணன், விமலா, எஸ்.மகாலட்சுமி, கலை கண்ணன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்து இருந்தார். மேலும் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல படத்தின் பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பதாகையின் கீழ் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ். ஆர். பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை காண்போம்.




ஜோக்கர் படத்தின் கதை என்ன?
மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்) என்பவர் தான் விரும்பிய மல்லிகா (ரம்யா பாண்டியன்) என்பவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார். இந்த நிலையில் தான் பிறந்த வீட்டில் கழிவறை இல்லாமல் சிரமங்களை சந்தித்த மல்லிகா கழிவறை இருக்கும் வீட்டில் தான் திருமணமாகி செல்ல ஆசைப்படுவதாக தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து மல்லிகாவிற்காக கழிவறை கட்ட நினைக்கும் மன்னர் மன்னன் அரசின் திட்டமான வாழ்ந்து பாப்போம் என்ற திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று ஒரு கழிவறையை கட்டுகிறார்.
மல்லிகாவை திருமணம் செய்துகொள்ளும் மன்னர் மன்னன் சந்தோஷமாக வாழ்கிறார். இந்த நிலையில் அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறை சுவர் ஒரு நாள் இரவு மழையில் கழிவறை சென்ற மல்லிகாவின் மீது விழுந்துவிடுகிறது. இதனால் படுத்தப் படுக்கையாக மாறிவிடுகிறார் மல்லிகா.
Also Read… அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை இருக்கும் போல – இயக்குநர் சொன்ன சம்பவம்
இந்த சம்பவத்திற்கு பிறகு மனநலம் பாதிக்கப்பட்டவராகிறார் மன்னர் மன்னன். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியை பார்த்துக்கொண்டே அரசிற்கு எதிராக போராடவும் செய்கிறார். இறுதியில் அவர் போராட்டம் வென்றதா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ஜோக்கர் படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Joker completes 9 years — a journey beyond cinema, into hearts. Grateful for every cheer, every tear, and every bit of love.🌟#9YearsOfJoker@gurusoms @iamramyapandian @Rchezhi #ShanmugamVelusamy @RSeanRoldan @Dir_Rajumurugan @prabhu_sr #ஜோக்கர் pic.twitter.com/H3c9VhdI5O
— DreamWarriorPictures (@DreamWarriorpic) August 12, 2025
Also Read… கல கல காமெடிக்கும் பஞ்சம் இல்லாத ப்ரோ டாடி படம்… ஹார்ஸ்டாரில் மிஸ்செய்யாமல் பாருங்க!