Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை இருக்கும் போல – இயக்குநர் சொன்ன சம்பவம்

Piriyadha Varam Vendum: நடிகர்கள் பிரசாந்த் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியான படம் பிரியாத வரம் வேண்டும். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் பிரசாந்த் படப்பிடிப்பிற்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று இயக்குநர் கமல் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை இருக்கும் போல – இயக்குநர் சொன்ன சம்பவம்
அஜித், பிரசாந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2025 20:05 PM

நடிகர்கள் பிரசாந்த் (Actor Prashanth) மற்றும் ஷாலினி (Actress Shalini) இருவரும் இணைந்து நடித்தப் படம் பிரியாத வரம் வேண்டும். நடிகை ஷாலினி இறுதியாக நடித்தப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்தப் படத்தை இயக்குநர் கமல் எழுதி இயக்கி இருந்தார். பிப்ரவரி மாதம் 16-ம் தேதி 2001-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர்கள் பிரசாந்த் மற்றும் ஷாலினி இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ஜோமோல், கிருஷ்ணா, மணிவண்ணன், நிழல்கள் ரவி, அம்பிகா, அஷ்வினி, மனோரமா, கோவை சரளா, தாமு, ஜனகராஜ், சார்லி, வையாபுரி, பாலாஜி, சாப்ளின் பாலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இந்தப் படம் வெளியாகி சுமார் 24 வருடங்களை கடந்த நிலையில் படத்தின் ஷூட்டிங் போது நடிகர்கள் அஜித் – ஷாலினி திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் படத்தினை விரைவில் முடிக்குமாறு இயக்குநரிடம் அஜித் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் பிரசாந்த் வேண்டும் என்றே படப்பிடிப்பை தாமதமாக்கியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அஜித் – ஷாலினி திருமணத்திற்கு பிரசாந்த் எதிர்ப்பா?

அதன்படி இயக்குநர் கமல் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் ஷாலினி இறுதியாக நடித்தப் படம் பிரியாத வரம் வேண்டும். இந்தப் படத்திற்கு பிறகு அஜித் மற்றும் ஷாலினி இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருந்தனர். இதன் காரணமாக படத்தை விரைவாக முடிக்க அஜித் என்னிடம் கேட்டுக்கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினி நடிக்க மாட்டாங்க என்பதால் விரைவில் முடிக்குமாறு அஜித் கூறியுள்ளார். ஆனால் இதற்கு படத்தின் நாயகன் பிரசாந்த் ஒத்துகொள்ளவில்லை. அவர் வேண்டும் என்றே படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவார். அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை எதுவும் இருந்ததா தெரியல.

Also Read… அனிருத் சினிமாவிற்கு வர நான் காரணம் இல்லை – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விசயம்!

அஜித் மட்டும் இல்ல ஷாலினியும் அவரது அப்பாவும் என்கிட்ட படத்தை சீக்கிரமா முடிக்க சொல்லி கேட்டாங்க. அதனால வேற வழி இல்லாம பிரசாந்திற்கு டூப் போட்டு ஷாலினியுடன் நடிக்க வச்சோம். அப்படியும் ஒரு பாடல் மீதம் இருந்தது. அந்த நேரத்துல அஜித் ஷாலினி திருமணம் முடிஞ்சுடுச்சு.

அந்த ஒரு பாட்டுக்கு மட்டும் என்று அஜித்திடம் நிறைய கேட்டேன். சாரி ஷாலினி நடிக்க மாட்டாங்கனு சொல்லிட்டாங்க. அப்பறம் அந்தப் பாட்டுக்கு ஷாலினிக்கு டூப் போட்டு பிரசாந்தை வைத்து எடுத்து முடித்தேன் என்று இயக்குநர் கமல் பேட்டியில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரிவொன்றை சந்தித்தேன் பாடல் வீடியோ:

Also Read… ஃபகத் பாசிலின் ஆவேஷம் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?