ஃபகத் பாசிலின் ஆவேஷம் படத்தினை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
நடிகர் ஃபகத் ஃபாசில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது நடிப்பில் வெலியான படங்களைப் ரசிகர்கள் மீண்டும் இன்று இணையத்தில் பேசி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ஆவேஷம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஃபகத் பாசில் (Actor Fahadh Faasil) நடிப்பில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் பான் இந்திய அளவில் ரசிகர்கள் கொண்டாடி பல ரீல்ஸ்களை பதிவிட்டது இந்த ஆவேஷம் படத்திற்கு தான். அந்த வகையில் கடந்த 11-ம் தேதி ஏப்ரல் மாதம் 2024-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கிய படம் ஆவேஷம். இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நாயகனாக நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் சங்கர், ரோஷன் ஷானவாஸ், சஜின் கோபு, மிதுட்டி, நீரஜா ராஜேந்திரன், தங்கம் மோகன், பூஜா மோகன்ராஜ், ப்ரீத்தி பரத்வாஜ், பிரமோத் வெளியநாடு, ஆஷிஷ் வித்யார்த்தி,
மன்சூர் அலி கான், ஸ்ரீஜித் பாபு, கிருஷ்ண குமார், ஃப்ரீஸ்டைல் கிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர்.
மேலும் இந்தப் படத்தை இதை ஃபகத் பாசில், நஸ்ரியா நாஜிம் மற்றும் அன்வர் ரஷீத் அவர்களின் ஃபகத் ஃபாசில் அண்ட் பிரண்ட்ஸ் மற்றும் அன்வர் ரஷீத் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு பேனர்களின் கீழ் தயாரித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைத்து இருந்தார். படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




ஃபகத் பாசிலின் ஆவேஷம் படத்தின் கதை என்ன?
கேரளாவில் இருந்து பெங்களூரில் கல்லூரியில் படிப்பதற்காக வந்த 3 பேர் ஹாஸ்டலில் ஒரே ரூமில் இருப்பதன் மூலம் நண்பர்களாக மாறுகிறார்கள். கல்லூரியில் நடக்கும் ராகிங் அவர்களை மிகவும் வேதனைக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து உள்ளூரில் ஒரு சப்போர்ட் இருந்தால் கல்லூரியில் இருக்கும் பிரச்னைகளை தவிர்களாம் என்று அவர்கள் மூவரும் நினைக்கிறார்கள்.
இந்தமாதிரியான விசங்களுக்கு லோக்களில் உள்ள அடியாட்கள் மாதிரி ஒரு சப்போர்ட் கிடைக்க வேண்டும் என்று நினைத்து ஒவ்வொரு ஒயின்ஷாப் பார் செல்கிறார்கள். அதில் ஒருவரை தேர்வு செய்து அவருடன் நட்பாக முயற்சிக்கிறார்கள் ஆனால் முடியவில்லை. இந்த நிலையில் பெங்களூரில் பெரிய டானாக இருக்கும் ரங்கன் சேட்டனை (ஃபகத் பாசில்) எதிர்பாராத விதமாக சந்திக்கின்றனர்.
அந்த சந்திப்பிற்கு பிறகு அந்த மூன்று கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை எப்படி மாறியது என்பதே படத்தில் கதை. இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
Also Read… நடிகர்கள் சூர்யா – ஜோதிகா குழந்தைகளுக்கு பிடித்த நடிகர் இவரா?
இணையத்தில் கவனம் பெறும் ஃபகத் பாசில் வீடியோ:
😀😀😀
Dhyan about “Aavesham – Varshangalkku Shesham Clash”
— Christopher Kanagaraj (@Chrissuccess) December 2, 2024
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஹிட் படமான சீதா ராமம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?