Retta Thala : அருண் விஜய்யின் ‘ரெட்ட தல’ – அதிரடி டீசர் இதோ!
Retta Thala Movie Teaser : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரின் முன்னணி நடிப்பில் மிகப் பிரம்மாண்டமான கதைக்களம் கொண்ட படமாக உருவாகியிருப்பது ரெட்ட தல திரைப்படம். இந்த படமானது வெளியீட்டிற்குத் தயாராகிவரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய்யின் (Arun Vijay) நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் வணங்கான் (Vanagaan). இந்த படமானது கடந்த 2025, ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஆரம்பத்தில் நடிகர் சூர்யா (Suriya) நடிக்கவிருந்தார். பின் சில காரணங்களால் அவர் இப்படத்திலிருந்து வெளியேறினார். பின் நடிகர் அருண் விஜய் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து இந்த 2025 ஆம் ஆண்டு இவரின் நடிப்பில் வெளியீட்டிற்குக் காத்திருக்கும் படம் ரெட்ட தல (Retta Thala). இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் முன்னணி நாயகனாக நடிக்க, நடிகை சித்தி இத்னானி (Siddhi Idnani) கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை தமிழ் பிரபல இயக்குநர் கிருஷ் திருக்குமரன் (Kris Thirukumaran) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனின் மான் கராத்தே மற்றும் உதயநிதி ஸ்டாலினின் கெத்து போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
இதை அடுத்ததாக அருண் விஜய்யின் நடிப்பில் ரெட்ட தல என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் , இந்த ரெட்ட தல படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். ரெட்ட தல டீசரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : தலைவன் தலைவி படம் உலக அளவில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது தெரியுமா?
சிவகார்த்திகேயன் வெளியிட்ட ரெட்ட தல படத்தின் டீசர்
Happy to unveil the teaser of #RettaThala – https://t.co/l1wsuBiVER
Looks intense. Best wishes to @arunvijayno1 anna, @KrisThiru1 sir and the entire team 😊👍@bbobby @BTGUniversal @SiddhiIdnani @actortanya #Johnvijay @SamCSmusic @editoranthony @tijotomy @aarun666 @tseriessouth… pic.twitter.com/85fANADJHl
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 7, 2025
ரெட்ட தல திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது
இந்த ரெட்ட தல திரைப்படமானது மிகவும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் அருண் விஜய் இரு வேடத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முற்றிலும் ஆக்ஷ்ன் மற்றும் காதல் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இந்த படத்தில் அருண் விஜய்யுடன் சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகேஷ் சாமி, ஜான் விஜய், அசோகன் மற்றும் நிதிஷ் நிர்மல் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் கடந்த 2025, மே மாதத்திலே நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?
தற்போது இறுதிக்கட்ட வேலைகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த படமானது வரும் 2025, அக்டோபர் மாதத்தில் வெளியிடுவதற்குப் படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். இந்த படமானது அருண் விஜய்யின் வெற்றி திரைப்படமாக அமையும் எனக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.