தலைவன் தலைவி படம் உல அளவில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது தெரியுமா?
Thalaivan Thalaivii Movie Collection: நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இந்தப் படம் உலக அளவில் இதுவரை எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) நாயகனாகவும் நடிகை நித்யா மேனன் (Actress Nithya Menon) நாயகியாகவும் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் தலைவன் தலைவி. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான இந்த தலைவன் தலைவி படம் கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்த தலைவன் தலைவி படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. எப்பவும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகும் ஃபேமிலி செண்டிமெண்ட் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கம். அந்த வரிசையில் தற்போது தலைவன் தலைவி படத்திற்கும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.
மேலும் இந்த தலைவன் தலைவி படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து வெளியான பொட்டல மிட்டாயே என்ற பாடல் வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




உலக அளவில் 75 கோடிகளை வசூலித்தது தலைவன் தலைவி படம்:
திருமணத்திற்கு பிறகு இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டாமும், சலசப்புக்கும் இடையே இருக்கும் பிணைப்பையும் மையமாக வைத்து வெளியான இந்த தலைவன் தலைவி படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 75 கோடிகளை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Families’ Favourite Blockbuster ❤️ 75 Cr+ Gross Worldwide! Unstoppable love continues for #ThalaivanThalaivii 🫶#தலைவன்தலைவி @VijaySethuOffl @MenenNithya @pandiraaj_dir @iYogiBabu@Music_Santhosh @Lyricist_Vivek @thinkmusicindia @studio9_suresh@Roshni_offl @kaaliactor… pic.twitter.com/xQABBZVv3E
— Sathya Jyothi Films (@SathyaJyothi) August 6, 2025