Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாலினி என்ன மிரட்டுவாங்க – மாதவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!

Actor Madhavan: தமிழ் சினிமா ரசிகர்களிடையே என்றும் க்ரஷாக இருப்பவர் நடிகர் மாதவன். இவர் முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகை ஷாலினி ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை மிரட்டியது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் ஷாலினி என்ன மிரட்டுவாங்க – மாதவன் சொன்ன சுவாரஸ்ய சம்பவம்!
ஷாலினி உடன் மாதவன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Aug 2025 23:35 PM

நடிகர்கள் மாதவன் (Actor Madhavan) மற்றும் ஷாலினி (Actress Shalini) இருவரும் இணைந்து நடித்தப் படம் அலைபாயுதே. கடந்த 14-ம் தேதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு இந்தப் படம் வெளியாகியுள்ளது. அதன்படி அலைபாயுதே படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மணிரத்னம் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் மாதவன் மற்றும் ஷாலினி உடன் இணைந்து நடிகர்கள் ஜெயசுதா, ஸ்வர்ணமால்யா, விவேக், பிரமிட் நடராஜன், ரவிபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, வேணு அரவிந்த், கே.பி.ஏ.சி.லலிதா, சுகுமாரி, அழகம் பெருமாள், ஹரி நாயர், கார்த்திக் குமார், மேதா ரகுநாத், ஆர்.சுந்தரமூர்த்தி, குமார் நடராஜன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார்.

அலைபாயுதே படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் காதலர்கலின் அடையாளச் சின்னமாக தற்போதும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் மாதவனை மிரட்டிய ஷாலினி:

இந்த நிலையில் இந்த அலைபாயுதே படத்தின் ஷூட்டிங்கின் போது எல்லாம் நடிகை ஷாலினி மற்றும் அஜித் இருவரும் காதலித்து வந்துள்ளனர். படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் ரொமான்ஸ் நிறைந்தது என்பதால் ஷாலினி மாதவனிடம் எனக்கும் அஜித்திற்கும் கல்யாணம் ஆக போகுது நீ ரொமான்ஸ் சீன் லவ் சீன்லலாம் தூரமா இருந்து நடி கிட்ட வராதா என்று நடிகை ஷாலினி மிரட்டுவார் என்று கலகலப்பாக நடிகர் மாதவன் தனது முந்தைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இது கலகலப்பாக அவர் பேசினார் என்பதே உண்மை. மேலும் நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் நடித்த நடிகர்களில் நடிகர் மாதவனை மட்டும் தான் ஃபாலோ செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read… நடிகையாவதற்கு முன்பு அந்த நடிகரோட நடிக்க அவ்வளவு ஆசைப்பட்டேன் – ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்

 நடிகர் மாதவனின் சமீபத்திய எக்ஸ் தள பதிவு:

Also Read… மகன் சஞ்சய் குறித்து சுவாரஸ்யமாக பேசிய விஜய்… என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?