தசாவதாரம் படத்தில் கமல் ஹாசனுக்கு உதவிய ஸ்ருதி ஹாசன் – என்ன செய்தார் தெரியுமா?
Shruti Haasan: நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தப் படம் தசாவதாரம். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் 10 வேடங்களில் நடித்து இருந்தது ரசிகர்களை பிரமிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஸ்ருதி ஹாசன் கமல் ஹாசனுக்கு உதவியது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தசாவதாரம். இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் படத்தில் 10 கதாப்பாத்திரங்களில் நடித்து கலக்கியிருப்பார். இது தமிழ் சினிமாவை மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப்பார்க்க வைத்த சம்பவம் ஆகும். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தசாவதாரம் படத்தை இயக்கி இருந்தாலும் நடிகர் கமல் ஹாசன் தான் அதற்கு கதை எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர்கள் அசின், நாகேஷ், மல்லிகா ஷெராவத், ஜெயப்பிரதா, கே.ஆர்.விஜயா, ரேகா, நெப்போலியன், ரகுராம், ரமேஷ் கண்ணா, பி.வாசு, சந்தான பாரதி, வையாபுரி, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிவர்மா உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.
தசாவதாரம் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்கைடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் பல உலக தரம் வாய்ந்த டெக்னிக்கை பயன்படுத்தி இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சைண்டிஸ்ட் கதாப்பாத்திரம் தொடங்கி அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஸ் வரை வெளி நாட்டவர், வயதான பாட்டி, ஜாப்பனீஸ், வளர்ந்த மனிதர், போராளி, போலீஸ் அதிகாரி, பாடகர், ஃப்ளாஸ்பேக்கில் வரும் பார்ப்பனர் என 10 வேடங்களிலும் நடிகர் கமல் ஹாசன் கலக்கியிருப்பார்.




தசாவதாரம் படத்தில் கமல் ஹாசனுக்கு உதவிய ஸ்ருதி ஹாசன்:
இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் வெளிநாட்டு நபர் போல ஒரு கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து இருந்தார். அமெரிக்க நபர் போல நடிகர் கமல் ஹாசன் நடித்த அந்தப் கதாப்பாத்திரத்திற்கு அமெரிக்கர்கள் பேசும் மொழி உச்சரிப்பை நடிகை ஸ்ருதி ஹாசன் தான் நடிகர் கமல் ஹாசனுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். இது தொடர்பாக முன்னதாக அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்து உள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்று வருகின்றது.
நடிகை ஸ்ருதி ஹாசனின் தந்தை கமல் ஹாசனுடன் வெளியிட்ட சமீபத்திய பதிவு:
View this post on Instagram
Also Read… சினிமாவில் 15 ஆண்டுகள் நிறைவு செய்த அதர்வாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் எத்தனை லட்சம் தெரியுமா?