நஸ்லேன் – கல்யாணி பிரியதர்ஷனின் லோகா படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
Lokha Movie Release date: நடிகர்கள் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து மலையாள சினிமாவில் நடித்துள்ள படம் லோகா. சூப்பர் ஹீரோ கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

மலையாள சினிமாவில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தண்ணீர் மதன் தினங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனவர் நஸ்லேன். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பாராப்பட்டப்பது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான வாரனே ஆவேஷ்யமுண்டு, ஹோம், கேஷு ஈ வீடிண்ட நாடன், ஷூப்பர் ஷரன்யா, ஜோ அண்ட் ஜோ, வாலாட்டி, அயல்வாசி, நெய்மர் என தொடர்ந்து செகண்ட் ஹீரோவாகவே நடித்து வந்தார். இந்தப் படங்கள் வெற்றியடைந்தாலும் நஸ்லேன் (Actor Naslen) நாயகனாக நடித்ட பிரேமலு படம் தான் அவரை தென்னிந்தியா முழுவதும் பிரபலம் ஆக்கியது. இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் மற்றும் மமிதா பைஜூ இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து இருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதனைத் தொடர்ந்து நடிகை மமிதா பைஜுவிற்கு தமிழில் மட்டும் 5 படங்களுக்கு மேல் கமிட்டானார். நஸ்லேன் தொடர்ந்து மலையாளத்தில் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் பிரேமலு படத்திற்கு பிறகு ஐயம் காதலன் மற்றும் ஆலப்புழா ஜிம்கானா ஆகிய படங்களில் நடித்தார். இது இரண்டும் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.




லோகா படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?
இயக்குநர் டாம்னிக் அருண் எழுதி இயக்கி உள்ள படம் லோகா. சூப்பர் ஹீரோ கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் நஸ்லேன் நாயகனாகவும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும் நடித்துள்ளனர். இதில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தான் சூப்பர் ஹீரோவாக இருப்பது போல படத்தின் டீசரைப் பார்க்கும் போது தெரிந்தது.
மேலும் இந்தப் படத்தை வேஃபர் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளனர். இந்த நிலையில் துல்கர் சல்மான் தனது எக்ஸ் தள பக்கத்தில் லோகா படத்தின் போஸ்டர் உடன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் லோகா படம் வருகின்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.
Also Read… கல கல காமெடிக்கும் பஞ்சம் இல்லாத ப்ரோ டாடி படம்… ஹார்ஸ்டாரில் மிஸ்செய்யாமல் பாருங்க!
நடிகர் துல்கர் சல்மன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Step into the world of Lokah this Onam#Lokah #theyliveamongus@DQsWayfarerFilm @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko @iamSandy_Off @AKunjamma#Lokahmovie pic.twitter.com/F71hxuIm4S
— Dulquer Salmaan (@dulQuer) August 10, 2025
Also Read… அஜித்திற்கும் பிரசாந்திற்கும் முன்பகை இருக்கும் போல – இயக்குநர் சொன்ன சம்பவம்