Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Anirudh Ravichander : அந்த ரகசியத்தை லோகேஷும் நானும்… – அனிருத்!

Anirudh About The Lyricists Secret : தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர்தான் அனிருத் ரவிச்சந்தர். இவரின் இசையமைப்பில் மிகப் பிரம்மாண்டமாக வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் படம் கூலி. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் மற்றும் தனக்கும் தெரிந்த ரகசியம் குறித்து அனிருத் பேசியுள்ளார்.

Anirudh Ravichander : அந்த ரகசியத்தை லோகேஷும் நானும்… – அனிருத்!
அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 12 Aug 2025 16:47 PM

தென்னிந்திய சினிமாவில் ராக்ஸ்டார் என அழைக்கப்பட்டு வருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் 13 வருடங்களுக்கு மேலாக இசையமைத்து வருகிறார். அந்த வகையில் இவரின் இசையமைப்பில் வெளியீட்டிற்குக் கடத்திருக்கும் திரைப்படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் இப்படமானது தயாராகியுள்ளது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் சுமார் ரூ 355 கோடி மதிப்பீட்டில் இப்படமானது தயாராகியுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கும் நிலையில், லோகேஷ் கனகராஜுடன் இவர் இணைந்த 4வது படமாகும்.

இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன் மற்றும் அனிருத் என மூவரும் கலந்துகொண்டனர். அதில் பேசிய அனிருத், தனக்கும் லோகேஷ் கனகராஜிற்கு இடையே இருக்கும் ரகசியம் குறித்துப் பேசியுள்ளார். அவர் கூலி படத்தில் மான்ஸ்டர் மற்றும் மொபிஸ்டா போன்ற பாடலின் வரிகளை எழுதியவர் யார் என்ற ரகசியம் குறித்துப் பேசியுள்ளார்.

இதையும் படிங்க :  சினிமாவில் நல்லவனா நடிச்சு நடிச்சு போர் அடிக்குது – நடிகர் நாகர்ஜுனா

கூலி படத்தின் ரகசிய பாடலாசிரியர் பற்றி அனிருத்

அந்த நிகழ்ச்சியின்போது, அனிருத்திடம் ஹைசன்பெர்க் என்றால் யார் என கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அனிருத், ” நானும் லோகேஷ், கனகராஜும் சேர்ந்து ,அந்த ஹைசன்பெர்க் என்ற நபரைப் பற்றிய ரகசியத்தை எங்களின் இறுதி வரை எடுத்துச்செல்வோம் என்று நினைக்கிறேன். அந்த நபர் மிகவும் திறமையானவர். எங்களின் கூட்டணியும் நன்றாக இருந்தது என்றே கூறலாம். ஏனென்றால் நான் நாகார்ஜுனா சாருக்கு, ஹைசன்பெர்க் உதவியுடன் மான்ஸ்டர் மற்றும் மொபிஸ்டா போன்ற பாடல்களை உருவாக்கியிருக்கிறேன். கடைசிவரை அந்த ஹைசன்பெர்க் யார் என்பதின் ரகசியம் ரகசியமாவே இருக்கட்டும்” என அனிருத் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த ஹைசன்பெர்க் என்பது உண்மையான மனிதரா? அல்லது ஏ.ஐ தொழில்நுட்பமா? எனப் பலரும் சந்தேகித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கூலி படத்தின் மோனிகா பாடலைப் பாராட்டிய மோனிகா பெலூசி – நெகிழ்ச்சியில் நடிகை பூஜா ஹெக்டே

அனிருத்தின் ரவிச்சந்திரன் பேசிய வீடியோ :

இந்த கூலி திரைப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்த படமானது உலக அளவில் டிக்கெட் ப்ரீ- புக்கிங்கில் மட்டுமே இதுவரை சுமார் ரூ 65 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிச்சயமாக முதல் நாளில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர்.