Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சில படம் ஓடாது எனத் தெரியும்.. அதனால் அந்த விஷயத்தை நான் நிறுத்திவிட்டேன்.. அனிருத் உடைத்த உண்மை!

Anirudh Ravichander About Twitter Emojis : இந்தியாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் எமோஜிகள் பதிவிடுவதை நிறுத்திவிட்டதாக கூறியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம், .

சில படம் ஓடாது எனத் தெரியும்.. அதனால் அந்த விஷயத்தை நான் நிறுத்திவிட்டேன்.. அனிருத் உடைத்த உண்மை!
அனிருத் ரவிச்சந்தர்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 05 Aug 2025 21:47 PM

பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் தமிழ் சினிமாவைத் தாண்டி, தற்போது தெலுங்கு மற்றும் இந்தி போன்ற திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் இவரின் இசையில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) முதல் தளபதி விஜய் வரை பல்வேறு முன்னணி பிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கப் படம் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது திரைப்படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் கிட்டத்தட்ட 8 பாடல்கள் உருவாகியுள்ளது. இந்நிலையில், கூலி படத்தின் புரோமோஷன் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அனிருத், டிவிட்டரில் (Twitter) படங்கள் குறித்து எமோஜியை பதிவிடுவதை நிறுத்திவிட்டதாகவும், அதற்கான காரணத்தையும் பற்றியும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மணிரத்னத்தின் இயக்கத்தில் புதிய படத்தில் இணைகிறாரா துருவ் விக்ரம்? வைரலாகும் தகவல்!

இசையமைப்பாளர் அனிருத் கூறிய விஷயம்

அந்த நேர்காணலில் இசையமைப்பாளர் அனிருத்திடம், டிவிட்டரில் எமோஜி வெளியிடுவது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அனிருத், ” நான் டிவிட்டரில் எமோஜிகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் நமக்கே சில திரைப்படம் ஓடாது என்று தெரியும், அப்போது அதை வெளியிட்டால் தவறாகிவிடும். அதனால் டிவிட்டரில் எமோஜிகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டேன்.

இதையும் படிங்க : பராசக்தி படத்தில் நான் தான் வில்லனாக நடிக்க வேண்டியது – லோகேஷ் கனகராஜ் சொன்ன சம்பவம்

கூலி படம் குறித்து அனிருத் வெளியிட்ட பதிவு :

அதனால் எனக்கு அதிக அழுத்தம் தான். ஏனென்றால் நான் பதிவிடுவதைப் பார்த்து, அனிருத் என்ன குறைவான எமோஜிகளை வெளியிட்டுள்ளார். இதனால் இந்த படம் நன்றாக இருக்காது எனக் கூறி வருகிறார்கள் என்றார். அப்போது தொகுப்பாளர்,  கூலி படம் படம் நன்றாக இருக்காதா ? எனக் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அனிருத், கூலி படம் நன்றாகத்தான் வந்திருக்கிறது. தற்போது டிவிட்டரில் படங்களைப் பற்றி எமோஜிகளை பதிவிடுவதை முழுவதும் நிறுத்திவிட்டேன்” என அனிருத் தெரிவித்திருந்தார். இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.