கங்குவா படத்தில் நடிக்க இதுதான் காரணம் – பாபி தியோல் சொன்ன விசயம்
Actor Bobby Deol: பாலிவுட்டில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் பாபி தியோல். இவர் ரன்பீர் கபூர் உடன் இணைந்து நடித்த அனிமல் படம் பான் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்தப் படத்திற்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் நிறைய வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார் நடிகர் பாபி தியோல்.

கடந்த 1995-ம் ஆண்டு இந்தி சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனவர் பாபி தியோல் (Actor Bobby Deol). இவர் இந்தி சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி வில்லன், குணச்சித்திர நடிகர் என பலப் கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். தொடர்ந்து இந்தி சினிமாவில் நடித்து வந்த நடிகர் தற்போது தென்னிந்திய சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார். அதன்படி இந்தியில் இவரது நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் அனிமல். இந்தி மொழியில் உருவான இந்தப் படம் பான் இந்திய மொழிகளில் வெளியானது. நடிகர் ரன்பீர் கபூர் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் பாபி தியோல் வில்லனாக கலக்கி இருப்பார். இந்தப் படத்திற்கு பிறகு நடிகர் பாபி தியோலுக்கு தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
அதன்படி இவர் தமிழில் நடிகர் சூர்யா உடன் இணைந்து கங்குவா படத்தில் நடித்து இருந்தார். பீரியட் படமாக வெளியான இதில் நடிகர் பாபி தியோல் வில்லனாகவே நடித்து இருந்தார். படம் தொழில்நுட்ப விசங்களால் பல விமர்சனத்தைப் பெற்றாலும் நடிகர்களின் நடிப்பு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




கங்குவா படத்தில் நடிக்க சூர்யாதான் காரணம்:
இந்த நிலையில் நடிகர் பாபி தியோல் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் கங்குவா படத்தில் நடித்தது குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறியதாவது நான் தமிழில் கங்குவா படத்தில் நடித்து இருந்தேன். அந்தப் படத்தில் நடிக்க நடிகர் சூர்யா தான் காரணம். எனக்கு சூர்யாவை மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கையில் அவருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொண்டேன் என்று தெரிவித்து இருந்தார். இந்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மேலும் நடிகர் பாபி தியோல் கங்குவா படத்தை தொடர்ந்து தமிழில் தற்போது விஜயுடன் இணைந்து ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திலும் நடிகர் பாபி தியோல் வில்லன் கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தமிழ் சினிமாவில் நடிகர் பாபி தியோல் நடிக்கும் இரண்டாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… இது 1950 மாடல்… பார்ட்ஸ் எல்லாம் மாத்திட்டாங்க – கூலி பட விழாவில் கலகலப்பாக பேசிய ரஜினிகாந்த்!
இணையத்தில் கவனம் பெறும் பாபி தியோலின் பேட்டி:
” I did Kanguva ! Bcz I always wanted to be a part of a film with @Suriya_offl as he is a great actor ”
– @thedeol The way a man is still living within that bond 🥺❤️ pic.twitter.com/rVnI9vVzHb
— Sri (@sridhar_Offl) August 11, 2025
Also Read… இணையத்தில் கவனம் பெறும் ஃபகத் பாசிலின் ஓடும் குதிரை சாடும் குதிரை படத்தின் ட்ரெய்லர்