Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இணையத்தில் கவனம் பெறும் ஃபகத் பாசிலின் ஓடும் குதிரை சாடும் குதிரை படத்தின் ட்ரெய்லர்

Odum Kuthira Chaadum Kuthira Official Trailer: நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஓடும் குதிரை சாடும் குதிரை. இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது. மேலும் முழுக்க முழுக்க காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.

இணையத்தில் கவனம் பெறும் ஃபகத் பாசிலின் ஓடும் குதிரை சாடும் குதிரை படத்தின் ட்ரெய்லர்
ஓடும் குதிரை சாடும் குதிரைImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 11 Aug 2025 13:29 PM

நடிகர் ஃபகத் பாசில் (Actor Fahadh Faasil) நடிப்பில் இறுதியாக மலையாள சினிமாவில் வெளியான படம் ஆவேஷம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் ஃபகத் பாசில் தமிழ் சினிமாவில் வேட்டையன், தெலுங்கு சினிமாவில் புஷ்பா 2, மீண்டும் தமிழில் மாரீசன் ஆகிய படங்களில் நடித்து இருந்தார். கடந்த மாதம் தமிழில் வெளியான மாரீசன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவில் அடுத்ததாக ஃபகத் பாசில் நடிப்பில் என்னப் படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்ததாக இவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உடன் இணைவது குறித்த அறிவிப்பு வெளியானது.

அதன்படி இயக்குநர் அல்தாஃப் சலீம் எழுதி இயக்கி உள்ள படம் ஓடும் குதிரை சாடும் குதிரை. காமெடி ட்ராமாவாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் நடிகர் ஃபகத் பாசில் நாயகனாகவும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாகவும் நடித்து உள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ரேவதி பிள்ளை, லால், வினய் ஃபோர்ட், அனுராஜ் ஓ.பி., அனுராஜ், சுரேஷ் கிருஷ்ணா, வினீத் தட்டில் டேவிட், வினீத் வாசுதேவன், கோபு கேசவ், ரஞ்சினி ஜார்ஜ், அதிரா நிரஞ்சனா, வர்ஷா ரமேஷ், ரியாஸ் நர்மகலா, ஸ்ரீஜா மேனன், ஆலா எஸ். நயனா, எய்தல் எவனா ஷெரின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் ஓடும் குதிரை சாடும் குதிரை பட ட்ரெய்லர்:

அதன்படி இதை ஆஷிக் உஸ்மான் தனது ஆஷிக் உஸ்மான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இந்த ஓடும் குதிரை சாடும் குதிரைப் படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படம் நடிகர்கள் ஃபகத் பாசில் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இருவருக்கும் இடையே நடக்கும் டெஸ்டினேஷன் வெட்டிங்கை மையமாக வைத்து காமெடியாக இந்தப் படம் உருவாகியுள்ளது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மேலும் படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 29-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் இது மிகவும் ஜாலியான படமாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read… எனது சினிமா வாழ்க்கையின் முதல் நாளில் இருந்து தூண்களாக இருப்பவர்கள்… அன்பறிவு குறித்து லோகேஷ் நெகிழ்ச்சிப் பதிவு!

கல்யாணி பிரியதர்ஷன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Lokesh Kanagaraj : ஆமிர் கான் நடிக்கும் படத்தின் கதை இப்படித்தான் இருக்கும் – லோகேஷ் கனகராஜ் பேச்சு!