புதிய கார் வாங்கிய சிவாங்கி கிருஷ்ணன்… வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ!
Sivangi Krishnan: சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் என்ற பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சிவாங்கி. இவர் தற்போது புதிய கார் வாங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகின்றது.

பாடகி மற்றும் நடிகை என தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவராக இருக்கிறார் சிவாங்கி கிருஷ்ணன். இவர் பாடகி பின்னியின் மகள் என்பது பலருக்கும் தெரியாத தகவல். பாடகி பின்னி தான் சந்திரமுகி படத்தில் வரும் ரா ரா சரசுக்கு ரா ரா பாடலைப் பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவாங்கி (Sivaangi Krishnan) சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலமாக பிரபலம் ஆனதை விட குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே நன்கு பிரபலம் ஆனார். மேலும் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிய சிவாங்கி பின்பு போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தியதும் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சின்னத்திரையில் வலம் வந்த சிவாங்கி பின்பு வெள்ளித்திரையில் நடிகையாகவும் பாடகியாகவும் காலடித்தடத்தைப் பதித்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி 2022-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் நடித்து இருந்தார். நடிகை மாளவிகா மோகனனின் தோழியாக சிவாங்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் மலையாள பெண்ணாகவே நடிகை சிவாங்கி நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நடிகை சிவாங்கி நாய் சேகர் ரிட்டன்ஸ், காசேதான் கடவுளடா, ஷாட் பூட் த்ரீ ஆகியபடங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இன்றி தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் தொடர்ந்து பாடல்களைப் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இறுதியாக லவ் மேரேஜ் படத்தில் பாடல் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




புதிய கார் வாங்கிய சிவாங்கிக்கு ரசிகர்கள் வாழ்த்து:
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சிவாங்கி சமீபத்தில் தான் புதிய கார் வாங்கியதாக வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிவாங்கி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கூறீயுள்ளதாவது, என்னுடைய முதல் காரை வாங்கினேன். இது சாத்தியமற்றது என்று நினைத்த 15 வயது சிவாங்கி இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாள். இதைச் சாத்தியமாக்கிய என் பெற்றோர், குருக்கள், கடவுள்கள் மற்றும் பிரபஞ்சத்திற்கு நன்றி. மேலும் மக்காளே, நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை! நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னைத் தள்ளிக்கொண்டே இருந்தீர்கள். என் நலம் விரும்பிகள் மற்றும் மக்காக்கள் அனைவருக்கும் நன்றி என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
Also Read… 3 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஹிட் படமான சீதா ராமம் படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இணையத்தில் வைரலாகும் சிவாங்கி வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram