Raghava Lawrence: நான் அழுதுவிட்டேன்.. ‘மகாவதார் நரசிம்மா’ படத்தைப் பாராட்டிய ராகவா லாரன்ஸ்!
Raghava Lawrence About Mahavatar Narasimha Movie : கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடனக்கலைஞர் மற்றும் இயக்குநர் என பல்வேறு திறமைகளை வைத்திருப்பவர் ராகவா லாரன்ஸ். இவர் சமீபத்தில் வெளியான மகாவதார் நரசிம்மா படத்தை, பார்த்துப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ராகவா லாரன்ஸின் (Raghava Lawrence) நடிப்பில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. நடிகராக மட்டுமில்லாமல் இவர் இயக்குநராகவும் , பல படங்களை இயக்கியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் (Jigarthanda Double X). இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமானது, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்து இவர் புல்லட் (Bullet), பென்ஸ் (Benz) மற்றும் காஞ்சானா 4 போன்ற படங்களிலும் நடித்து வந்தார். இதில் இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ள படம் புல்லட். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து. சமீபத்தில் இப்படத்தின் டீசரும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
அவர் சமீபத்தில் வெளியாக மகாவதார் நரசிம்மா (Mahavatar Narsimha) என்ற திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த திரைப்படத்தைப் பாராட்டி அவர், எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “மகாவதார் நரசிம்மா படத்தைப் பார்த்துப் பல இடங்களில் கண்ணீர் வடித்தேன்” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.
இதையும் படிங்க : ஜெயிலர் 2 கதை எனக்கு தெரியும் – லோகேஷ் கனகராஜ்!




மகாவதார் நரசிம்மா படத்தைப் பாராட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
அந்த பதிவில் நடிகர் ராகவா லாரன்ஸ், ” எனது குடும்பத்தினருடன் ஒரு பவர்புல் சினிமா அனுபவத்தை நான் பெற்றேன். நான் ஷூட்டிங்கில் இருந்ததால் தாமதமாகவே மகாவதார் நரசிம்மா படத்தைப் பார்த்தேன். ஒரு பக்தனாக, என்னைப் படத்துடன் ஆழமாக இணைக்க முடிந்தது, மேலும் பல காட்சிகளில் அது என்னைக் கண்ணீர் வரவழைத்தது.
இந்த பார்வையை உயிர்ப்பித்ததற்காக இயக்குநர் அஸ்வின் குமார் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் முழு குழுவினருக்கும் எனது மிகப்பெரிய நன்றி. குழு தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : எஸ்டிஆர் 49 படத்தில் நடிகர் சிம்பு இப்படிதான் இருப்பார் – இயக்குநர் ராம்குமார் கொடுத்த அப்டேட்!
மகாவதார் நரசிம்மா திரைப்படம் :
அறிமுக இயக்குநர் அஸ்வின் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மகாவதார் நரசிம்மா. இந்த படமானது புராணக் கதையான விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மாவின் கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படமானது சாதாரண படங்களைப் போல இல்லாமல், முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாகியிருந்தது. இந்த படமானது கடந்த 2025, ஜூலை 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. சுமார் ரூ. 15 கோடி செலவில் வெளியான இப்படம், சுமார் ரூ. 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது. இப்படமானது தற்போது வரையிலும் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.