Coolie : ரஜினிகாந்த் VS ஆமிர் கான்.. ரசிகர்களிடையே வைரலாகும் நியூ போஸ்டர்!
Coolie Movie New Poster Viral : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படமாக உருவாகியிருப்பது கூலி திரைப்படம். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இப்படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் வட இந்தியக் கூலி டிக்கெட் புக்கிங் குறித்து, படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கோலிவுட் சினிமாவில் இந்த 2025ம் ஆண்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ள படம் கூலி (Coolie). இதில் தமிழ் உச்ச நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்திற்கு ஜோடி எதுவும் இல்ல என்றும், அவர் சிங்கிள் கதாநாயகனாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின் 171வது படமாக்க உருவாகியிருக்கும் நிலையில், பல்வேறு எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இப்படம் சுமார் ரூ 300 கோடி பொருட்செலவில் உருவாகியிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் நடிகர்கள் சத்யராஜ், சவுபின் ஷாஹிர், உபேந்திர ராவ், ஸ்ருதி ஹாசன், ஆமிர் கான் (Aamir Khan)மற்றும் நாகார்ஜுனா என பான் இந்திய மொழி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது கூலி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. வட இந்திய டிக்கெட் புக்கிங் குறித்த அறிவிப்புடன் வெளியான போஸ்டரை, ஆமிர் கான் மற்றும் ரஜினிகாந்த் இருக்கும் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நாகார்ஜுனா மற்றும் ஆமிர் கான் இருவரும் வில்லனா? எனக் கேள்விகளும் எழுந்து வருகிறது.




இதையும் படிங்க : யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை கடந்தது பவர் ஹவுஸ் பாடல் – வைரலாகும் போஸ்ட்
வட இந்திய ப்ரீ புக்கிங் குறித்து கூலி படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர் பதிவு :
#CoolieThePowerHouse bookings open across North India today, 9 PM onwards 🍿🤩#CoolieThePowerHouse is releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv… pic.twitter.com/JXDngXABVY
— Sun Pictures (@sunpictures) August 9, 2025
கூலி படத்தில் கேமியோ ரோலில் தமிழ் பிரபலம் :
இந்த கூலி படமானது பான் இந்திய மொழி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் பான் இந்திய பிரபலங்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த்தின் இளமைப் பருவ காட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ரஜினியின் இளமை காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆனால் இது குறித்துப் படக்குழு எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. கூலி படத்தின் இந்தி ட்ரெய்லரில் இந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், படத்தின் மீது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க : மதராஸி படத்தின் கதை இதுவா? – இணையத்தில் கசிந்த தகவல்!
ப்ரீ புக்கிங் வசூல் விவரம் :
கூலி படத்தின் வெளிநாடு ப்ரீ புக்கிங்கானது, கடந்த வாரம் முதல் தொடங்கியிருந்தது. மேலும் தமிழகத்தில் கடந்த 2025, ஆகஸ்ட் 8ம் தேதியில் இரவு 8 மணி முதல் தொடங்கியது. இந்நிலையில், இந்த படமானது ப்ரீ புக்கிங்கில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?. சுமார் ரூ 2.67 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இப்படமானது வெளியான முதல் நாளிலே பலகோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.