Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Venkat Prabhu : தளபதி விஜய்யின் நடிப்பில் GOAT vs OG படம் உருவாகுமா? வெங்கட் பிரபு விளக்கம்!

Venkat Prabhu About GOAT vs OG With Vijay : தளபதி விஜய்யின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தி கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தின் தொடர்ச்சியாக GOAT vs OG திரைப்படம் உருவாகுமா என்பதைப் பற்றி, இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் கொடுத்துள்ளார்.

Venkat Prabhu : தளபதி விஜய்யின் நடிப்பில் GOAT vs OG படம் உருவாகுமா? வெங்கட் பிரபு விளக்கம்!
விஜய் மற்றும் வெங்கட் பிரபுImage Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 12 Aug 2025 16:51 PM

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவர் அஜித் குமார் (Ajith Kumar) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) வரையிலும் பல்வேறு முன்னணி பிரபலங்களை வைத்து படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தி கோட் (The GOAT). தளபதி விஜய்யின் நடிப்பில் 68வது திரைப்படமாக இப்படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் இப்படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தில் தளபதி விஜய், அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். இந்த படமானது உலகளாவிய வசூலில் சுமார் ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக விஜய், ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் இணைந்து நடித்திருந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தளபதி விஜய் நடிப்பில் GOAT vs OG படம் உருவாகுமா? எனக் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த வெங்கட் பிரபு, “தலைவர் ஓகே சொன்னால் நிச்சயமாக உருவாகும்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியது குறித்து இன்னும் விரிவாகப் பார்க்கலாம்.

இதையும் படிங்க ; சினிமாவில் நல்லவனா நடிச்சு நடிச்சு போர் அடிக்குது – நடிகர் நாகர்ஜுனா

தளபதி விஜய்யுடன் வெங்கட் பிரபு இருக்கும் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Venkat Prabhu (@venkat_prabhu)

தளபதி விஜய்யுடன் GOAT vs OG படம் பற்றி வெங்கட் பிரபு விளக்கம் :

அந்த நிகழ்ச்சியின்போது இயக்குநர் வெங்கட் பிரபுவிடம், தளபதி விஜய்யை வைத்து GOAT vs OG படம் உருவாகுமா ? எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த வெங்கட் பிரபு, ” GOAT vs OG  திரைப்படம் உருவாக வேண்டும் என்பது எல்லாருக்குமே ஆசைதான்.  விஜய்யுடன் படம் பண்ணவேண்டும் என தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கும் ஆசைதான். அவரும் தீவிர விஜய் ரசிகை. ஆனால் தளபதி விஜய்யின் இலக்கு தற்போது வேறு ஒன்றாக இருக்கும்போது, GOAT vs OG படம் பற்றி நாங்கள் எதுவும் யோசிக்கவில்லை.

இதையும் படிங்க : ஜன நாயகன் விஜயின் கடைசிப் படம் என்பது சோகத்தை ஏற்படுத்தியது – நடிகை பூஜா ஹெக்டே

அதனால் இப்போதைக்கு GOAT vs OG இல்லை. தலைவர் ஓகே சொன்னால் பண்ணிரலாம்” என அந்த நிகழ்ச்சியின்போது , இயக்குநர் வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்த தகவலானது தளபதி விஜய்யின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் புதிய படத்தையும் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.